சனிப்பெயர்ச்சி: ரிஷபத்துக்கு லாபத்தில் சனி.. அதிர்ஷ்டம் கொட்டும்.. பலன்கள், பரிகாரங்கள் இதோ!

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் ரிஷபத்துக்கு லாப ஸ்தானத்தில் சனி பகவான் வருவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான்.

Sani peyarchi Sani peyarchi palangal Rishabam

நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.

அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் ரிஷப ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசிக்கு 11 இல் லாபத்தில் சனி பகவான் வருகிறார். ரிஷபத்துக்கு சுக்கிரன் அதிபதியாக உள்ளார். சுக்கிரனும், குருபகவானும் நட்பு கிரகங்கள். கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலத்துக்குச் சென்று வருவது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும். பல் விஷயங்கள், ரத்தத்தில் பரவும் தொற்றுநோய் அபாயம் போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெற்றோர், ரத்த பந்த உறவுகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் பெரியோரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் அவர்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சி, அனுகூலத்தை காண்பீர்கள். உடலில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உடலில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல மருத்துவர், மருந்துகள் கிடைக்கும். உற்சாகத்துடன் காண்பீர்கள். நாள்பட்ட நோய்களில் இருந்து குணமடைவீர்கள். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடலில் பிரகாசம் ஏற்படும். நல்ல விஷயங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். தொழிலில் அனுகூலம் காணப்படும். பெரும் முதலாளிகள் ஆகக்கூடிய ராசிக்காரர்களாக இருப்பீர்கள்.

பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக பேசுவது ஜாமீன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். எல்லாவிதத்திலும் அனுகூலம் உண்டாகும். ஜூன் மாதத்துக்குள் இடம் மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். எந்தவொரு விஷயத்தையும் தள்ளிப்போடக் கூடாது. திருமணத்தில் இருந்த பாதிப்புகள் அனைத்தையும் ஜூன் மாதத்துக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.

சனி 11 இல் இருப்பதால் வீடுகளில் கூடுதல் அறைகள் கட்டுவதற்கான யோகம் உண்டு. பயணங்கள், புதிய அறிமுகங்களில் கவனமாக இருக்க வேண்டும். மீடியா துறை, அரசியலில் இருப்பவர்கள் பெரிய பொறுப்புக்கு வருவார்கள். பெண்களுக்கு யோகமும், அனுகூலமும் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+