Sani Peyarchi: தனுசு ராசிக்கு அர்த்தாஷ்ட சனியால் வரும் ஆபத்து.. 5 விஷயத்தில் ரொம்ப கவனம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும். இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தனுசு ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார் சனி பகவான். மீனம் உங்களுக்கு 4 ஆம் பாவம், சுக தாயார் ஸ்தானம். இந்த சனி அர்த்தாஷ்டமசனி என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமசனி கொடுக்கக்கூடிய கெடு பலன்களில் 50 சதவீத கெடு பலன்கள் இந்த காலகட்டத்தில் ஏற்படும். 5 விஷயங்களில் கவனமாக இருந்தால் அர்த்தாஷ்டம சனியில் இருந்து தப்பிக்கலாம்.
பண விஷயத்தில் கவனம்
பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் பணம் கொடுத்தால் திரும்பி வராமல் போகக்கூடிய சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வேலை செய்யக்கூடிய விஷயங்களில் சிறிய சிறிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையை பார்த்துக் கொண்டே செல்வது நல்லது.
பிரச்சனைகள் வரும்
குடும்பத்தில் சிறிய குழப்பங்கள், பிரச்சனைகள், பஞ்சாயத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்தால் தான் நிம்மதி ஏற்படும். இதுபோன்ற மனநிலையை மாற்றிக் கொள்வது நல்லது. பிரச்சனைகள் எல்லாம் தானாகத் தீரும். புத்திசாலினத்தைக் கொண்டு தீரும் பிரச்சனையை தீர்ப்பது நல்லது. இல்லையெனில்ல இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக் கொண்டு கடந்து சொல்வது நல்லது.
பகை ஏற்படும்
நன்றாகப் பழகிக் கொண்டிருந்த உறவுகள் திடீரென பகை பாராட்டும் நிலை ஏற்படும். அவர்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இந்த 5 விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் சனியினால் பெரிய கெடுபலன்கள் எதுவும் ஏற்படாது.
வாக்கு கொடுப்பதில் கவனம்
சனி 2 மற்றும் 3க்கு அதிபதியானவர். தன குடும்ப வாக்கு ஸ்தானத்துக்கும், இளைய சகோதர தைரிய ஸ்தானத்துக்கும் சனி தான் அதிபர். வாக்குக் கொடுப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாக்கு கொடுத்தால் அதனைக் காப்பாற்றாமல் போகக்கூடிய சூழல் ஏற்படும். பெரிய அளவில் செலவு செய்யாமல் அளந்து செய்வது நல்லது.
செலவு செய்வதில் கவனம்
அத்தியாவசியமான விஷயத்துக்கு மட்டும் செலவு செய்வது நன்மை பயக்கும். தைரியம், தன்னம்பிக்கை குறைந்தது போலத் தோன்றும். ஆனால், அதைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை. சனி அதுபோன்ற மாயை ஏற்படுத்தும். அதைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. சனியின் பார்வை 1, 6, 10 ஐ பார்ப்பதால் அதீத குழப்பம், எரிச்சல், டென்ஷன், மன ரீதியான பிரச்சனை, ஏன் தான் வாழுகிறோமோ என்கிற எண்ணம், மந்த நிலை போன்றவை ஏற்படும்.
வேலையில் கவனம்
4 பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும். ஈகைத் தன்மை உங்களுக்கு அதிகரிக்கும். கடன் வாங்குவது, கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தினமும் செய்கிற வேலையில் கொஞ்சம் பாதிக்கப்பட்டது போலத் தோன்றும். உங்கள் வேலையை நீங்கள் பாட்டுக்கு செய்து கொண்டே இருப்பது நல்லது.
10 ஆம் பாவம் தொழில் ஸ்தானத்தை சனி பார்ப்பதால் அதீத டென்ஷன் ஏற்படும். அந்த கோபத்தை வீட்டுக்குள் வந்து காட்டாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் கடைப்பிடித்தாலே சனி உங்களுக்குப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது.












Click it and Unblock the Notifications