Sani Peyarchi: திரும்பி வந்துட்டேனு சொல்லும் கடக ராசி.. இனி தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

sani-peyarchi-what-kind-of-benefits-will-get-kadagam-rasi-people-during-this-sani-peyarchi

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும்.

இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடக ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு 9 ஆம் பாவமான பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார். கடந்த காலங்களில் கடகம் ஏராளமான கஷ்டங்களைப் பட்டிருப்பீர்கள். அசிங்கம், அவமானம், தலைகுனிவைப் பட்டிருப்பீர்கள். வேலையை விட்டு தூக்கியது, நல்ல நிலையில் இருந்து கீழே இறங்கியது போன்ற பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். சனியினால் பட்ட அடி அவமானத்தில் இருந்து மீளாமல் இருந்திருப்பீர்கள்.

சனி எந்தளவுக்கு உங்களுக்கு கஷ்டப்படுத்தியதோ, எதை எல்லாம் இழந்தீர்களோ அந்த நிலை எல்லாம் மாறி நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எல்லா விதத்திலும் அனுகூலத்தைப் பெறுவீர்கள். நல்ல அதிர்ஷ்டம், முன்னேற்றம், மேன்மை, அனுகூலத்தைப் பெறுவீர்கள். 9 ஆம் பாவத்தில் சனி இருப்பதால் உங்களுக்கும், உங்கள் தந்தைக்குமான உறவுமுறையில் நல்ல இணக்கம் ஏற்படும்.

ஆசைகள் நிறைவேறும்

நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள், கனவுகள் எல்லாம் நிறைவேறும். பெரிய பதவி, பொறுப்புகள் எல்லாம் கிடைக்கும். நினைத்ததை எல்லாம் சாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பலவிதமான ஆசைகளும் நிறைவேறும் காலகட்டம். சனி பகவான் 7 மற்றும் 8 க்கு அதிபதி. சனி பகவான் தற்போது 9 ஆம் இடத்துக்கு வருவதால் ஏதோ ஒரு வகையில் பாக்கியத்தைப் பெறுவீர்கள்.

அப்பாவின் உடல் சார்ந்த பிரச்சனைகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டுக்குச் சென்று படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நடக்கும். வெளிநாடு வேலை, வெளிநாட்டில் படிப்பு போன்றவை உண்டாகும். 3, 6, 13 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் அற்புதமான யோகம் உண்டாகும். தைரியம், நம்பிக்கை அதிகரிக்கும்.

வெற்றி பெறும் யோகம்

எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சுற்றுலா செல்வது, அக்கம்பக்கத்தினருடன் இணக்கமாகப் பெறுவது, எல்லோருடனும் நல்ல உறவில் இருப்பது போன்ற யோகம் உண்டு. கடனை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். ஏதாவது ஒரு வகையில் கடனை அடைத்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பாதிப்புகளுக்கு நல்ல சிகிச்சைகள் கிடைக்கும்.

லாப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள், மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். எந்த விஷயங்களை எல்லாம் ஆசைப்பட்டீர்களோ அவை எல்லாம் நடக்கும் காலகட்டமாக இருக்கும். 100 க்கு 80 சதவீதம் யோகம் பெறும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+