Sani Peyarchi: கும்ப ராசிக்கு பாத சனி.. அடுத்தடுத்து வரும் அதிர்ஷ்டம்.. வாயில் தான் பிரச்சனையே
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் [Kumbam Sani peyarchi palan]
கும்ப ராசியினருக்கு ஜென்ம சனியில் இருந்து பாத சனிக்கு செல்லும் நல்ல காலகட்டம். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். எதிரிகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உடற்பயிற்சியை தினந்தோறும் மறக்காமல் செய்ய வேண்டும். இல்லையெனில், தோல் பட்டை வலி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

யோகம் கொட்டும்
தொழில் அபிவிருத்தி, உத்தியோக அபிவிருத்தி, படிப்பு அபிவிருத்தி, வியாபார அபிவிருத்தி ஏற்படும் நல்ல காலகட்டம். புதிய தொழில் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அடுத்தடுத்து யோகம் உண்டாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். செல்வாக்குகள் கூடும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மன கஷ்டங்கள், பணம் சார்ந்த கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
வார்த்தையில் கவனம்
வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கனிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். காலையில் எழுந்ததும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் பெரிய அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும். ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மன அழுத்தத்தை தீர்த்து அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது.
தலையிடக் கூடாது
குடும்பத்தில் துணை விஷயத்தில் அந்நியர் தலையீடு, உறவினர்கள் தலையீடு, நண்பர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்ப விஷயத்தில் உங்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் உண்டாகும். டிசம்பர் மாதத்தில் இருந்து மன அழுத்தங்கள் எல்லாம் தீரும். ஜூன் மாதத்தில் இருந்து தேக ஆரோக்கியத்தில் 6 ஆம் இடத்தில் குரு வருவதால் செரிமானம் தொடர்பான விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
ஆரோக்கியம்
சர்க்கரை, லிவர், கிட்னி தொடர்பான விஷயங்களில் பாதிப்புகள் இருந்தால் உரிய மருத்துவ ஆலோசனை, பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அடிவயிறு, முதுகு, கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சனி தான் உங்களுக்கு அதிபதி என்பதால் தினந்தோறும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது.
பரிகாரம்
கூடா நட்பால் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. திருவண்ணாமலை சென்று வழிபாடு செய்வது வருவது ஏற்றத்தைத் தரும். மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அனுமனை வழிபாடு செய்வது முன்னேற்றத்தைத் தரும்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications