Sani Peyarchi: கும்ப ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. சனிப்பெயர்ச்சியில் வரும் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

sani-peyarchi-what-kind-of-benefits-will-get-kumbam-rasi-people-during-this-sani-peyarchi

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும். இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கும்பம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கும்பம்

கும்பம் ராசியினருக்கு கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பெயர்ச்சியாக இருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக எல்லாம் இருந்தும் நிம்மதியில்லை என்கிற சூழல் இருந்திருக்கும். மனம் ஒரு விதமான குழப்பத்திலும், மந்த நிலையிலும், பதட்டத்திலும் இருந்திருக்கும். செய்யலாமா, வேண்டாமா என்கிறத மன குழப்பம் இருந்து கொண்டே இருந்திருக்கம். ஜென்ம சனியாக இருந்த சனி இப்போது பாத சனியாக மீனத்துக்கு போகப் போகிறது.

கடனில் கவனம்

ஏழரை சனியின் கடைசிப் பகுதியில் இருக்கிறீர்கள். சனி பகவான் இதுவரை நிறைய கஷ்டத்தைக் கொடுத்திருப்பார். இனிவரும் நாட்களில் அந்த அளவுக்கு பாதிப்புகள் இருக்காது. இருப்பினும் குறிப்பிட்ட சில விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் கடன் கொடுப்பது, கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. கடன் வாங்கி சொத்துகளை வாங்குவதாக இருந்தால் சுய ஜாதகத்தை ஒருமுறை பார்த்துக் கொள்வது நல்லது.

பிரச்சனைகள் நீங்கும

யாரிடமும் பகை, நட்பும் வேண்டாம் என்கிற வகையில் உறவை வைத்துக் கொள்வது நல்லது. 1 மற்றும் 12க்கு அதிபதியானவர் சனி பகவான். உங்கள் சுய ஸ்தானத்துக்கும், விரய ஸ்தானத்துக்கும் அவர்தான் அதிபர். முதலில் இருந்ததுக்கு பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என நிம்மதியாக இருப்பீர்கள். இருப்பினும், ஒருவிதமான குழப்பம், மந்த நிலை இருந்து கொண்டே இருக்கும்.

அம்மாவின் ஆரோக்கியம்

சனி பகவானின் பார்வை 4, 8, 11 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் அலைச்சல் இருந்து கொண்டே இருக்கும். முன்பிருந்தது போல இல்லையெனினும் சிறிதளவாவது அலைச்சல் இருக்கும். அம்மாவுக்கு இருந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். 8 ஆம் பாவத்தை சனி பார்ப்பதால் ரகசியங்கள், ரகசிய உறவுகள் சார்ந்த சந்தேகங்கள் உங்களுக்கு வரும். மரபு வழி சொத்துகள் வருவதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கும்.

லாபம் கொட்டும்

வீடு கட்டும்போது அண்டை வீட்டாருடன் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், அதைப் பற்றி யோசிக்காமல் உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக் கொள்வது நல்லது. லாப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் எந்தளவுக்கு தொழிலில் கடின உழைப்பை போடுகிறீர்களோ அந்த அளவுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும்.

நல்ல அனுபவத்தையும், பாடத்தையும் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். தொழிலுக்கான அடித்தளத்தை இந்த காலகட்டத்தில் போட்டு வைப்பீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் நல்ல உறவை வைத்துக் கொள்ள வேண்டும். 100க்கு 60 சதவீதம் நன்மைகளைப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+