Sani Peyarchi: சொல்லி அடிக்கும் மகர ராசி.. சனிப்பெயர்ச்சியில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும். இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மகரம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகரம் ராசியினருக்கு கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பெயர்ச்சியாக இருக்கிறார். மீனம் உங்களுக்கு 3 ஆம் பாவம். மூன்றாம் பாவம் என்பது இளைய சகோதரர், தைரிய ஸ்தானம். இந்த சனி சகாய சனி என்று அழைக்கப்படுகிறது. சகாயம் என்பது பெயரிலேயே இருக்கிறது. சனி பகவானே உங்களுக்கு உதவி செய்யப் போகிறார். சனி நல்லது கொடுத்தாலும், கெட்டது கொடுத்தாலும் யாராலும் தடுக்க முடியாது.
பாதிப்புகள்
உங்கள் ராசியாதிபதி சனி பகவான் தான் என்பதால் உங்களுடைய கடவுளே ஈசன் தான். மகர ராசியினர் கடந்த 7 ஆண்டுகள் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் சொல்லி மாளாது. வேலையில் இருந்து துரத்தப்பட்டது, வேலையில் பழி சொல்லுக்கு ஆளானது, துரோகி, எதிரி போன்று சித்தரிக்கப்பட்டிருப்பீர்கள், எல்லா விதத்திலும் பாதிப்பு, உறவுகளில் பகை, நம்பியவர்கள் முதுகில் குத்தியது என பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள்.
ஏமாற்றம்
பிள்ளைகளால் பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள், நம்பி பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றியிருப்பார்கள், நம்பியவர்கள் முதுகில் குத்தியிருப்பார்கள். உறவுகளில் பகை, பிரச்சனை என பாதிக்கப்பட்டிருப்பீர்கள். பாரபட்சம் இல்லாமல் தண்டனை வழங்கக் கூடியவர் சனி பகவான். உங்கள் ராசியதிபன் இப்போது சகாய சனியாக உங்களுக்கு வருகிறார்.
பிரச்சனைகள் நீங்கும்
எல்லா விதத்திலும் சனி பகவான் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வேலையில் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை, காசு, பணம் பிரச்சனை, என எல்லா பஞ்சாயத்துகளும் தீரப் போகிறது. 1 மற்றும் 2க்கு அதிபதியானவர் சனி பகவான். சுய ஸ்தானத்துக்கும், தன குடும்ப வாக்கு ஸ்தானத்துக்கும் அதிபதியானவர்.
செல்வாக்கு கூடும்
சொல்வாக்கு செல்வாக்கு கூடும் காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம், பிரச்சனைகள் தீரும் காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த நிம்மதி இல்லாத சூழல் மாறும். நிறைய செலவுகள் இருந்தாலும், அதற்கேற்ப நல்ல வருமானங்களும் இருக்கும். ரிஷபத்துக்கு அட்டகாசமான காலமாக இருக்கும்.
குட்நியூஸ்
சனி 5, 9, 12 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூர்வீகம் சார்ந்த நல்ல செய்திகள் வந்து சேரும். அப்பா வழி சொந்தங்கள் மூலமாக ஆதரவு கிடைக்கும். அப்பா வழி சொந்தங்களால் ஏதாவதொரு ஆதரவு கிடைக்கும். மன ரீதியாக, உடல் ரீதியாக, ஆன்மீக ரீதியான ஆதரவுகள் கிடைக்கும். பூர்வீகம் சார்ந்த இடங்களை விற்கும் யோகம் உண்டாகும்.
கடன் தீரும்
கடனை அடைப்பதற்கான யோகம் ஏற்படும். பூர்வீகம் சார்ந்த நன்மைகள் கிடைக்கும். குழந்தை இல்லை என்று சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் ரீதியாக இருந்து வந்த கடுமையான மன உளைச்சல் மாறும். இனி பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உங்கள் பாரம் குறையும். 9 ஆம் பாவத்தை சனி பார்ப்பதால் அப்பாவால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
வெளிநாடு யோகம்
வெளிநாடு சென்று படிப்பது, வேலை செய்வது, உயர்கல்வி படிப்பது போன்ற யோகங்கள் உண்டாகும். 12 ஆம் பாவத்தை சனி பார்ப்பதால் புதிய வீடு, கார், இருசக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு சுற்றுலா செல்வது, டூர் போவது, நன்றாக சாப்பிடுவது, ஓய்வெடுப்பது, உங்களுக்குத் தேவையான செலவுகளைச் செய்வது போன்ற யோகம் உண்டாகும். 100க்கு 90 சதவீதம் நன்மைகளைப் பெறும் காலகட்டமாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications