Sani Peyarchi: மீனம் ராசியை வச்சு செய்யும் சனி பகவான்.. இந்த விஷயங்களில் கவனம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும். இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மீனம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசியினருக்கு கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பெயர்ச்சியாகி உங்களுக்கு ஜென்ம சனியாக வருகிறார். மன ரீதியான குழப்பங்கள், மந்தநிலை, எப்போது மகிழ்ச்சி கிடைக்கும் என்பது போன்ற நிலைமை இருக்கும். ஒரு வீட்டில் மீன ராசிக்கு குழந்தைகள் பிறந்தாலே அந்த வீட்டில் ஒரு முன்னேற்றம் ஏற்படும். மகனாக இருந்தால் அப்பாவை விட ஒரு படிக்கு மேலே செல்வார்கள். மீன ராசி ரேவதி நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையின் முற்பகுதி அல்லது பிற்பகுதியில் கண்டிப்பாக நன்றாக இருப்பார்கள்.
படிப்பில் கவனம்
எந்த விஷயத்தை செய்தாலும் செய்யும் முன்பும், செய்த பின்பும் கண்டிப்பாக ஒரு குழப்ப நிலையிலேயே இருப்பீர்கள். படிக்கும் குழந்தைகள் பலனை எதிர்பார்க்காமல் படிப்பில் உழைப்பைப் போட்டுக் கொண்டே இருப்பது நல்லது. படிப்பில் நல்ல ஏற்றம் ஏற்படும். ஒரு மாயை சனிப்பெயர்ச்சி ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். மீனம் ராசியினர் எப்போதும் உத்வேகத்துடன் இருப்பது போல இந்த காலகட்டத்திலும் ஓடிக் கொண்டே இருப்பது நல்லது.
திருப்தியின்மை
லாப ஸ்தானத்துக்கும், 12 ஆம் பாவமான மோட்ச விரயத்துக்கும் அதிபதியானவர் சனி பகவான். செய்யக் கூடிய தொழிலில் நல்ல லாபத்தைக் கொடுப்பார். வெளியில் போக வேண்டும், நன்றாக சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும் அதில் பெரிய அளவுக்கு திருப்தி ஏற்படாது. தேவையானவற்றை எல்லாம் செலவு செய்வோம். இருப்பினும் ஒருமுறைக்கு யோசித்து விட்டு செலவு செய்வது நல்லது.
குழப்பம்
சனி 3 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தம்பி, தங்கையின் ஆதரவு உண்டாகும். உங்கள் மீதே உங்களுக்கு அவநம்பிக்கை, குழப்பம் ஏற்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். மற்றவர்கள் மீது நம்பிக்கையின்மை ஏற்படும் வாய்ப்புள்ளது. 7 ஆம் பாவத்தை சனி பார்ப்பதால் உங்கள் துணை மீது தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
விட்டுக் கொடுங்க
கணவன், மனைவிக்கிடையே பிரிவு ஏற்படும் வாய்ப்புள்ளதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நல்ல வரன்கள் கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தை சனி பார்ப்பதால் வேலையில் பயங்கர அழுத்தம், டென்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 100க்கு 50 சதவீதம் நன்மைகளைப் பெறும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications