Sani Peyarchi: மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்.. பரிகாரங்கள்.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷம் ராசியினருக்கு கிடைக்கும பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

Sani peyarchi

மேஷம்

மேஷ ராசியினருக்கு 11 இல் இருந்த லாப சனி 12 ஆம் இடத்துக்கு வருகிறார். பெரிய வெற்றிகள் உண்டாகும். வண்டி வாகனங்களை மாற்றம் செய்வீர்கள். தொழிலில் நல்ல மாற்றம் செய்வீர்கள். உங்களை அவமானப்படுத்தியவர்கள், கேலி செய்தவர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்படுவது, அல்லது உங்களை விட்டு விலகிச் செல்லக்கூடிய சூழல் ஏற்படும். உங்களைப் பற்றி தவறாகப் பேசியவர்கள் காணாமல் போகும் வாய்ப்புள்ளது.

தடைகள் நீங்கும்

ஏழரை சனியில் ஏராளமான நன்மைகள் உண்டாகும். 27 1/2 வருடங்களாக இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். திருமணத் தடைகள், புத்திர சந்தானத்தில் இருந்த தடைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்புத் தடை, உத்தியோகத் தடை நீங்கும். சுபகாரியத்தில் இருந்து தடை தாமதங்கள் நீங்கும். நிறைய பணம் வந்து சேரும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும்.

சொந்த வீடு யோகம்

வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, பூமி வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது, அறக்கட்டளை தொடங்குவது, கோவில்கள் கட்டுவது, கோசாலை தொடங்குவது, தெய்வ திருப்பணிகள் செய்வது என முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். 25 ஆண்டுகளாக நடக்காத விஷயங்கள் அனைத்தும் இனி நடக்க ஆரம்பிக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும்.

குருமார்கள் தரிசனம்

நிறைய ஊர்களுக்குப் பயணம் செய்வீர்கள். தெய்வங்களை தரிசனம் செய்வது, குருமார்களை தரிசனம் செய்வது போன்ற யோகம் உண்டாகும். கடல் கடந்து தொழில், உத்தியோகம் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். 50 வயதைக் கடந்த மேஷம் ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். நல்ல மருத்துவம், மருந்துகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகளுக்கு நல்ல மருத்துவம், மருந்துகள் கிடைக்கும்.

முன்னேற்றம்

இளமை திரும்பும் யோகம் உண்டு. நிறைய உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்குவீர்கள். சுறுசுறுப்பாக மாறுவீர்கள். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். அரசுத் துறை, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பெரிய பொறுப்புகள் கிடைக்கும். தன்மையாகப் பேசத் தொடங்குவீர்கள். நிதானம், பொறுமையைக் கடைப்பிடிப்பீர்கள். எதிரிகள், பகைகள் விலகும் காலகட்டமாக இருக்கும். வருடம் முழுவதும் புதிய ஆடைகளை உடுத்தும் யோகம் உண்டாகும்.

பெரிய பதவிகள்

படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், அரசியல்வாதிகளுக்கு பதவிகள், பெயர், புகழ், பொறுப்பு கிடைக்கும் யோகம் உண்டாகும். பலதரப்பட்ட வருமானம் உண்டாகும். பெண்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எந்தப் பயணம் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது. இரவு 7 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வது, உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும்.

பரிகாரம்

மேஷ ராசிக்கு சனி பகவான் விரய சனியாக வருவதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தை தரும். இல்லையெனில், தினந்தோறும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தீபம் ஏற்ற வேண்டும். அல்லது பிறந்த கிழமையன்று பூஜை செய்து, குலதெய்வத்திற்கு அகல்தீபம் ஏற்றி வழிபாடு செய்வது பெரிய வெற்றியைக் தரும். மந்திராலயம் சென்று வருவது ஏற்றத்தைத் தரும். மாதத்தில் ஒரு வியாழக்கிழமை முருகரை குருவாக நினைத்து வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+