Sani Peyarchi: மேஷ ராசியினருக்கு சனிப்பெயர்ச்சியில் நடக்கும் மாற்றங்கள்.. முழு பலன்கள் விவரம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும்.
இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகவுள்ளார். இது ஏழரை நாட்டு சனியாகும். இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துமா என்றால் இல்லை. உங்கள் வயதைப் பொறுத்து தான் சனி பகவான் பலன்களைக் கொடுப்பார். இளம்வயது மேஷ ராசியினருக்கு அதாவது 10 முதல் 20 வயதுடையவர்கள் என்றால் முதல் சுற்று ஏழரை நாட்டு சனி உங்களுக்கு நடக்கும்.
அனுபவம்
இந்த காலகட்டத்தில் சில படிப்பினைகள், வேதனைகள், பாதிப்புகள் ஏற்படக்கூடும். இவை அனைத்துமே உங்களுக்கு பக்குவப்படுத்தக் கூடிய , அனுபவத்தைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். பணத்தின் அருமை உங்களுக்குப் புரியவரும். வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ளும் சூழல் ஏற்படும். இந்த காலகட்டத்தில் தாயை தெய்வமாகப் பார்ப்பது நல்லது. தாயை நிந்திப்பவர்களுக்கு கட்டாயம் பாதிப்புகளைத் தரும்
மத்திம வயது 40 முதல் 50 வயதுக்கு உட்பட்ட மேஷ ராசிக்காரர்களுக்கு பொங்கு சனியாக வருகிறார். செய்யும் தொழில், வேலையில் கடின முயற்சி, முழு உழைப்பைப் போடுபவர்களுக்கு முன்னேற்றம் உறுதியாக ஏற்படும். நேர்மையான வழியில் நடந்து கொள்பவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
ஆரோக்கியம்
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தங்குசனியாக உங்களுக்கு வருவார். ஆரோக்கியம் சார்ந்த குறைபாடுகள் ஏற்படுவதற்கான காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. 10, 11 க்கு அதிபதியானவர் சனி பகவான். சனியின் பார்வை 2, 6, 9 ஆம் பாவத்தை குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் சிறிய சிறிய குழப்பங்கள், பிரச்சனைகள் ஏற்படும்.
வாக்கு கொடுக்காதீர்
பெரிய அளவில் யாருக்கு வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. பெரிய அளவில் கடன் வாங்குவது, கடன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் குறைபாடுகள் இருப்பவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் அப்பாவுக்கும், உங்களுக்கும் இடையே உறவுமுறையில் இடைவெளி வருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
விட்டுக் கொடுப்பது நல்லது
தந்தையிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தேவையில்லாத வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. எந்தவொரு விஷயத்தை எடுத்தாலும் ஒருமுறைக்கு, இருமுறை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். 100க்கு 60 சதவீதம் நன்மைகளைப் பெறுவீர்கள். அனுமனை வழிபாடு செய்வது, அனுமன் சாலிஷா கேட்பது படிப்பது உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சனியினால் வரக்கூடிய கெடு பலன்கள் அகலும்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications