Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம்
சனிப்பெயர்ச்சி: 2026 வருடத்தில் மார்ச் மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமானது. ஜோதிடத்தில் கர்ம காரகன், நீதிமான் எனப்படும் சனிபகவான் இன்று பெயர்ச்சி ஆகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் 6.3.26 (இன்று) கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுப்படுமளவுக்கு அவர் பவர்புல்லான கிரகம். சனிப்பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பது குறித்து காணலாம்.
மேஷம்
12 ஆம் இடத்திக்கு வருகிறார். 12 என்பது மறைவு ஸ்தானத்தில் விரய சனியாக பெயர்ச்சி ஆகியுள்ளார். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடைமைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். வீண் விரயம் அதிகரிக்கும். எனவே செலவில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்திலும் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். உணவு கட்டுப்பாடு அவசியம் குழந்தைகள் விஷயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

கல்வியில் அதிக கவனம் வேண்டும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணி மாறுதலுக்கு இது சரியான காலம் இல்லை. பயணங்கள் அதிகரிகக் கூடும். வாரம் ஒருமுறையாவது ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்கு சனி பகவான் 11 ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் தொட்டது துலங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. பணி இல்லாதவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். பழைய பாக்கி வசூலாகும். கணவன் - மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். குழந்தை பாக்கியம் கைக்கூடும். பெருமாள் வழிபாடு சிறப்பான பலன்களை தரும்.
மிதுனம்
சனி பகவான் 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்து 10 ஆம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அற்புதமான மாற்றங்கள் நிகழும். நல்ல உத்யோகம் கிடைக்கும். தொழிலில் கடன் சுமை குறையும். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். திருமண தடை நீங்கி சுப காரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
கடகம்
சனி பகவான் உங்களின் 9 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வாழ்க்கையில் வளர்ச்சி பாதைக்கு பயணம் செய்வீர்கள். கடன், நோய், தொழில், இல்வாழ்க்கை பிரச்சனை உள்ளிட்ட அனைத்தும் நீங்கும். தினசரி சூரிய பகவானை வழிபட்டு வந்தாலே பிரச்சனைகள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்
சனி பகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதை அஸ்டம சனி என்பார்கள். குழந்தைகள் விஷயத்தில் கவனம் வேண்டும். கடன் கொடுக்கல் வாங்கலில் அதிக எச்சரிக்கை அவசியம். தெரியாத இடங்களுக்கு யாரையும் நம்பி செல்ல வேண்டாம். அதேநேரத்தில் சனி எதையும் எதிர்த்து நிற்பவர் என்பதால் மனவலிமை அதிகரிக்கும். நரசிம்மர் வழிபாடு நற்பலன்களை தரும்.
கன்னி
சனி பகவான் ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவது கண்டக சனி என்பார்கள். விரும்பியது நிறைவேறும். 5 மற்றும் 7 ஆகிய இடங்கள் இணைவதால் கல்வி, தொழில், வியாபாரம், இல்வாழ்க்கை எல்லாவற்றிலும் நற்பலன்கள் கிடைக்கும். யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். மற்றவர்களால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். சனிக்கிழமை தோறும் பெருமாளை வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கு சனிப்பெயர்ச்சி எல்லாவிதமான நற்பலன்களை கொடுக்கும். மனதில் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். எதிரிகள் பலமிழப்பார்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிலம், வீடு, வண்டி வாகனம் உள்ளிட்ட அசையும் அசையா சொத்து சேர்க்கை உண்டு. கடன் தொல்லைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இல்வாழ்க்கையில் இனிமை கூடும். சிவபெருமான் வழிபாடு சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.
விருச்சிகம்
சனி பகவான் உங்களுக்கு 5 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் சாதகம், பாதகம் என 2 பலன்களும் கிடைக்கும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
தனுசு
சனி பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவது நற்பலன்களையே தரும். பெரியோர் சொல் கேட்டு நடப்பது நன்மை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். கடின உழைப்புக்கு கை மேல் பலன் கிடைக்கும். நிலம், வீடு, வண்டி வாகனம் சேர்க்கை உண்டாகும். எண்ணம்போல் வாழ்க்கை என்பதால உயர்வான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். இஷ்டதெய் வழிபாடு நல்ல லாபத்தை கொடுக்கும்.
மகரம்
சனி பகவான் உங்களுக்கு 3 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். ஏழரை சனி நிறைடைகிறது. சகோதரர்களுடன் இருந்த பிரச்சனை நீங்கும். பணியிட மாறுதல் கிடைக்கும். முயற்சிகள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும். தொட்டதெல்லாம் பொன்னாக மாறும். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். அசையும், அசையா சொத்துகள் சேர்க்கை இருக்கும். திட்டமிட்டு செய்தால் கொடி கட்டி பறக்கலாம். குரு பகவான் வழிபாடு நற்பலன்களை தரும்.
கும்பம்
சனி பகவான் உங்களின் 2 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பாத சனி தொடங்குகிறது. மனக் குழப்பம் நீங்கும். கஷ்டங்கள் படிப்படியாக குறையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் கொடுக்கல் வாங்கலில் அதிக எச்சரிக்கை வேண்டும். பூர்விக சொத்துகள் கைக்கூடி வரும். பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். கணவன் - மனைவி உறவில் அந்யோநியம் அதிகரிக்கும். முருகன் வழிபாடு முன்னேற்றத்தை கொடுக்கும்.
மீனம்
சனி பகவான் உங்கள் ராசிக்குள் பயணமாகிறார். ஜென்ம சனி தொடங்குகிறது. அதைப் பார்த்து பயம் வேண்டாம். திட்டமிட்டு செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் மேற்கோள்ள வேண்டாம். முதலீடுகளில் அதீத எச்சரிக்கை வேண்டும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். ஆஞ்சிநேயர் வழிபாடு அற்புதமான மாற்றங்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications