Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sani Peyarchi: மிதுன ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப்போகுது.. திடீர் அதிர்ஷ்டம் கன்ஃபார்ம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மிதுனம் [Mithunam Sani peyarchi palan]

மிதுன ராசியினருக்கு 9 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 10 ஆம் இடத்துக்கு வருகிறார். ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. 24 வயதுக்கு மேலானவர்கள் இதயப் பரிசோதனை, மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களை பரிசோதனை செய்து கொள்வது நன்மையைத் தரும். உரிய மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது.

sani-peyarchi-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-gemini-people-in-this-sani-peyarchi-pe

திடீர் அதிர்ஷ்டம்

நிறைய அதிர்ஷ்டங்கள் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். எதிரிகள் விஷயத்தில் வெற்றிகள் ஏற்படும். அரசியலில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள். மன அழுத்தம் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயம் ஏற்படும்.

பெரிய பணம்

ஏற்றுமதி, இறக்குமதி, டிரேடிங் விஷயத்தில் பெரிய பணம் பார்க்கும் யோகம் உண்டாகும். புரோக்கரேஜில் நிறைய பணங்கள் கிடைக்கும். எல்லா விதத்திலும் ஏற்றம், நம்பிக்கை உண்டாகும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். எதிர்பார்க்காத பல்வேறு நல்ல விஷயங்கள் நடக்கும் நல்ல காலகட்டம். தொழிலில் இருந்த சிக்கல்கள் தீர தீர மனதில் இருந்த பாரங்கள் குறையும் நல்ல காலகட்டம்.

யோக பலன்

எதிர்பார்த்த, எதிர்பார்க்காத ஏற்றங்கள் காணப்படும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். ஆடை, ஆபரணங்களை அதிக அளவில் வாங்கிக் குவிக்கும் அமைப்பு உள்ளது. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் உண்டாகும் காலகட்டம். அடுத்தடுத்து எல்லா நல்ல விஷயங்களும் குடும்பத்தில் நடக்கத் தொடங்கும்.

பாதிப்புகள் நீங்கும்

உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பாதிப்புகள், சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. காது, மூக்கு, தொண்டை தொடர்பான விஷயங்களில் சிறிய பிரச்சனைகள் இருந்தாலும் மருத்துவரை அணுகுவது நன்மையைத் தரும்.

கவனம்

மிதுன ராசிக்கு 10 ஆம் இடத்தில் சனி வருவதால் தொழில் விஷயத்தில் ரோஷப்படுவது, பேப்பர் போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளிடம் பேசும்போது மிகுந்த கவனமாகப் பேசுவது, வேலையில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும். பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நன்மையைத் தரும்.

பரிகாரம்

திண்டிவனம் - பாண்டிச்சேரி செல்லக்கூடிய பஞ்சவடி கோயிலுக்குச் சென்று வருவது நன்மையைத் தரும். மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் விநாயகர், ஆஞ்சநேயருக்கு கோயிலில் நடைபெறும் அன்னதானத்திற்கு உங்களால் முடிந்த மிளகு, சீரகம், எண்ணெய், அரிசி என மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது நன்மையைத் தரும். கணபதி காயத்ரி, அனுமன் சாலிஷா படிப்பது அற்புதமான மேன்மையைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+