Sani Peyarchi: சனியின் அருளால் மிதுன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ராஜவாழ்க்கை நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

sani-peyarchi-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-people-during-this-sani-peyarchi

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும்.

இந்த சனிப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மிதுனம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பத்தாம் பாவத்தில் சனி பகவான் அமரப் போகிறார். தொழில், கர்ம ஸ்தானத்தில் சனி பகவான் அமரப் போகிறார். பத்தில் பாவி இருந்தால் அரசனைப் போல யோகமுண்டு என்று கூறுவார்கள். நீங்கள் எந்தளவுக்கு நேர்மை, நியாயம், உழைப்போடு இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு யோகத்தைப் பெறுவீர்கள்.

சனி பார்வை

உப்பிற்கான ஊதியம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். நேர்மை, நியாத்திற்கான பலன்களைப் பெறுவீர்கள். கடின உழைப்பைப் போடுபவர்களுக்கு தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். சனி பகவான் 3, 7, 10 விஷேச பார்வையான 4, 7, 12 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் சொகுசாக இருப்பீர்கள். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

சொகுசான வாழ்க்கை

முன்பு இருந்ததைவிட இப்போது கொஞ்சம் நல்ல வாழ்க்கையை அனுபவிப்பதற்கான யோகம் உண்டாகும். அம்மாவின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். களத்திர ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் மிதுன ராசி கணவன், மனைவிக்கு இடையே சுமூகமான உறவு ஏற்படும். பஞ்சாயத்துகள் தீரும். கணவன், மனைவி விட்டுக் கொடுத்துச் செல்லும் யோகம் உண்டாகும்.

வீடு, கார் வாங்கும் யோகம்

உங்களுக்கும், உங்கள் பிசினஸ் பார்ட்னருக்கும் இடையே நல்ல உறவு ஏற்படும். 12 ஆம் இடமான அயன சயன போக ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு சாப்பிடுவது, வெளிநாடுகளுக்குச் செல்வது, வெளியூர் செல்வது, சுற்றுலா செல்வது, ஆன்மீகத் தலங்களுக்குச் செல்வது, வீடு வாங்குவது, கார் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும்.

வழிபாடு

நினைத்தது எல்லாம் சாதகமாகும் யோகம் உண்டாகும். சுப விரயங்களைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுடைய ரகசியங்கள் வெளியில் வராது. பூர்வீக சொத்துகள் கிடைக்கும். ஒருமுறைக்கு இருமுறை வேலை செய்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். 100க்கு 75 சதவீதம் நன்மைகளைப் பெறுவீர்கள். பெருமாள், ஸ்ரீ ராமச்சந்திர வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+