Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கார், வீடு வாங்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

sani-peyarchi-what-kind-of-benefits-will-get-thulam-rasi-people-during-this-sani-peyarchi

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும். இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். துலாம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

துலாம் [Sani Peyarchi]

துலாம் ராசியினருக்கு கும்பத்தில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகியிருக்கக் கூடிய சனி பகவான் 6 ஆம் பாவத்தில் இருக்கிறார். இது ரோக சனியாகும். கடனில்லாத, நோயில்லாத, பகையில்லாத வாழ்க்கையை சனி பகவான் கொடுப்பார். ஏற்கனவே கடன் இருப்பவர்கள் கடனை அடைப்பதற்கான யோகம் உண்டாகும். அதற்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

கடன் தீரும்

நகையை வைத்து கடனை அடைப்பது, வட்டி கம்மியாக வங்கியில் லோன் எடுத்து கடன் அடைப்பது போன்ற அமைப்பு உள்ளது. நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். சனி நன்றாக இல்லையெனில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சனி நன்றாக இருந்தால் நல்ல மருந்து, மருத்துவத்தை தருவார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நோய்கள் குணமாகும். நல்ல மருத்துவம், மருந்துகள் கிடைப்பதற்கான அமைப்பு உள்ளது.

நல்ல செய்தி

துலாம் ராசிக்கு எதிரிகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. ராசியதிபன் சுக்கிரனாக இருந்தாலும், சனி உச்சமடையக் கூடிய ராசி என்பதால் வாதத் திறமை நன்றாக இருக்கும். சுக ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு நல்ல செய்தி, நல்ல ஆதரவு, பூர்வீகம் சார்ந்த நல்ல செய்தி, மன ரீதியாக, உடல் ரீதியாக, ஆன்மீக ரீதியான ஆதரவுகள் கிடைக்கும்.

தைரியம் அதிகரிக்கும்

சனி பகவானின் பார்வை 3, 9, 12 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய விஷயத்தை சாதிப்பீர்கள். தம்பி, தங்கையின் ஆதரவு கிடைப்பது, அண்டை வீட்டாருடன் நல்ல உறவு முறை ஏற்படும். சுற்றுலாக்கல் சென்று வரும் அமைப்பு உள்ளது. மரபு வழி சொத்துகள் கைக்கு வந்து சேரும். ரகசிய உறவுகள், ரகசியங்கள் வெளியில் தெரியாமல் காக்கப்படும்.

சனி பார்வை

12 ஆம் பாவத்தை சனி பார்ப்பதால் நன்றாக சாப்பிடும், தூங்கும் யோகம் உண்டாகும். வீடு, கார் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கும் யோகம் உண்டாகும். சுப விரயங்களைச் செய்து மகிழ்வீர்கள். 100க்கு 90 சதவீதம் யோகத்தை அள்ளும் காலகட்டமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+