Sani Peyarchi: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. விருச்சிக ராசிக்கு அடிக்கும் மிகப்பெரிய ஜாக்பாட்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும். இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். விருச்சிக ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு கும்பத்தில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகக் கூடிய சனி பகவான் 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்குப் போகிறார். 5 ஆம் பாவத்தில் இருக்கும் சனி பஞ்சம சனி என்று கூறப்படுகிறது. உங்களுடைய பஞ்சங்களை எல்லாம் போக்கக்கூடிய வகையில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். சனி உங்களுக்கு நல்லது கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
யோகம்
3 மற்றும் 4 க்கு அதிபதியானவர் சனி பகவான். இளைய சகோதரர், தைரிய ஸ்தானத்துக்கு உரியவர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை தைரியமாக முடிக்கும் காலகட்டமாக இருக்கும். சிறிய சிறிய சுற்றுலா சென்று வருவது, ஆன்மீக சுற்றுலா, இன்ப சுற்றுலா சென்று வரும் யோகம் உண்டாகும். அண்டை அயலாருடன் நல்ல உறவில் இருப்பீர்கள்.
உறவு முறை
தம்பி, தங்கையுடன் நல்ல உறவில் இருப்பீர்கள். 4 ஆம் பாவத்துக்கும் அதிபதியானவர் என்பதால் நல்ல சுகமாக இருப்பீர்கள். அம்மாவோடு உங்கள் உறவு முறை ஸ்திரமாக இருக்கும். அம்மாவுக்கு இருக்கும் ஆரோக்கியக் குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். சனியின் பார்வை 2, 7, 11 ஆம் பாவத்தில் இருக்கிறது.
செல்வாக்கு கூடும்
தன குடும்ப வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம், குதூகலம், திடீர் தன பிராப்தி ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உங்களுடைய சொல்வாக்கும், செல்வாக்கும் அதிகரிக்கும். மரியாதை, அந்தஸ்து அதிகரிக்கும். 7 ஆம் பாவத்தை சனி பார்ப்பதால் திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வரன்கள் கிடைக்கும்.
வரன் கிடைக்கும்
விவாகரத்துக்காக காத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக விவாகரத்து கிடைக்கும். இரண்டாவது வரனுக்காக காத்திருப்பவர்களுக்கு அதுவும் நல்ல வரனாக கிடைக்கும். பிசினஸ் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். கணவன், மனைவிக்கு இடையே விட்டுக் கொடுக்கும் தன்மை, அன்பு மேலோங்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
பதவி உயர்வு
லாப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் செய்யக்கூடிய தொழிலில் கடின உழைப்பை போடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் உழைப்பு, நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டாரத்தின் ஆதரவு கிடைக்கும். சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமான யோகத்தைக் கொடுக்கும். 100க்கு 70 சதவீதம் நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்கு மே 14க்கு பிறகு மாறும் வாழ்க்கை.. தொட்டதெல்லாம் துலங்கும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளும் மீனம் ராசி.. ஆபத்தும் காத்திருக்கு கவனம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications