Sani Peyarchi 2026: கோடீஸ்வர யோகம் பெறும் 6 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
சனிப்பெயர்ச்சி: கிரகங்களில் சனி பகவான் மிகவும் பலம் வாய்ந்தவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுப்படுமளவுக்கு முக்கியமானவர். ஜோதிடத்தில் கர்ம காரகன், நீதிமான் என்றழைக்கப்படுவார். அப்படிப்பட்ட சனிபகவான் இன்று 6.3.26 (இன்று) கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிப்பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் பெறும் 12 ராசிகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம் [Sani Peyarchi].
ரிஷபம்
ரிஷபம் ராசிக்கு சனி பகவான் 11 ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் தொட்டது துலங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. பணி இல்லாதவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். பழைய பாக்கி வசூலாகும். கணவன் - மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். குழந்தை பாக்கியம் கைக்கூடும். பெருமாள் வழிபாடு சிறப்பான பலன்களை தரும்.

மிதுனம்
சனி பகவான் 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்து 10 ஆம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அற்புதமான மாற்றங்கள் நிகழும். நல்ல உத்யோகம் கிடைக்கும். தொழிலில் கடன் சுமை குறையும். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். திருமண தடை நீங்கி சுப காரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். [Sani peyarchi palangal, pariharam]
கடகம்
சனி பகவான் உங்களின் 9 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வாழ்க்கையில் வளர்ச்சி பாதைக்கு பயணம் செய்வீர்கள். கடன், நோய், தொழில், இல்வாழ்க்கை பிரச்சனை உள்ளிட்ட அனைத்தும் நீங்கும். தினசரி சூரிய பகவானை வழிபட்டு வந்தாலே பிரச்சனைகள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கு சனிப்பெயர்ச்சி எல்லாவிதமான நற்பலன்களை கொடுக்கும். மனதில் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். எதிரிகள் பலமிழப்பார்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிலம், வீடு, வண்டி வாகனம் உள்ளிட்ட அசையும் அசையா சொத்து சேர்க்கை உண்டு. கடன் தொல்லைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இல்வாழ்க்கையில் இனிமை கூடும். சிவபெருமான் வழிபாடு சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.
தனுசு
சனி பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவது நற்பலன்களையே தரும். பெரியோர் சொல் கேட்டு நடப்பது நன்மை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். கடின உழைப்புக்கு கை மேல் பலன் கிடைக்கும். நிலம், வீடு, வண்டி வாகனம் சேர்க்கை உண்டாகும். எண்ணம்போல் வாழ்க்கை என்பதால உயர்வான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். இஷ்டதெய் வழிபாடு நல்ல லாபத்தை கொடுக்கும்.
மகரம்
சனி பகவான் உங்களுக்கு 3 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். ஏழரை சனி நிறைடைகிறது. சகோதரர்களுடன் இருந்த பிரச்சனை நீங்கும். பணியிட மாறுதல் கிடைக்கும். முயற்சிகள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும். தொட்டதெல்லாம் பொன்னாக மாறும். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். அசையும், அசையா சொத்துகள் சேர்க்கை இருக்கும். திட்டமிட்டு செய்தால் கொடி கட்டி பறக்கலாம். குரு பகவான் வழிபாடு நற்பலன்களை தரும்.












Click it and Unblock the Notifications