சனிப்பெயர்ச்சி: சிம்மம், கன்னி ராசிக்கு ஒரு நல்ல செய்தி.. ஒரு கெட்ட செய்தி!
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் நிகழவுள்ள முக்கிய கிரக பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். மற்ற கிரகங்களை விட ராசியில் அதிக காலம் பயணிப்பது சனி பகவான் தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்மம், கன்னி ராசிகளுக்கு பலன்கள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொகுப்பில் சனிப்பெயர்ச்சியால் சிம்மம் மற்றும் கன்னி ராசியினருக்கு ஏற்படப் போகும் மாற்றம் குறித்து பார்க்கலாம்.
சிம்மம்: உங்களுக்கு அஷ்டமத்து சனி தொடங்குகிறது. ஆனால் சிம்மம் ராசி இதைப்பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. எட்டில் சனி இருக்கும்போது, ஏழாம் இடத்தில் வேறு பெரிய கிரகமும் இருக்கும்போது சனியின் ஆதிக்கம் சற்று குறையும் என்பார்கள். அந்த வகையில் உங்களுக்கு பெரியளவுக்கு பாதிப்பு ஏற்படாது.

அதையும் மீறி இந்த காலத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வரத்தான் செய்யும். சின்ன சின்ன இழப்புகள் இருக்கும். வளர்ச்சியில் சிறிது பின்னடைவு இருக்கும். அதேநேரத்தில் வாழ்க்கை குறித்த நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பிரிவுகள் இருக்கும். உறவுகள், பிள்ளைகள் பற்றிய கவலைகள் தலை தூக்கும். நட்புகள் பற்றியும் புரிந்து கொள்வீர்கள்.
பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பங்கு சந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிதாக தொழில் தொடங்க இது சரியான காலம் இல்லை. எனவே புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் அதிகரிக்கும். காதல் உறவில் தோல்வி, பிரிவுகள் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். உத்யோகம் மற்றும் தொழிலில் சிக்கல்கள் அதிகரிக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவதை வீண் பிரச்னைகளை தவிர்த்து வெற்றியை கொடுக்கும்.
கன்னி: சனி பகவான் கடந்த இரண்டு வருடங்களாகவே உங்களுக்கு சாதகமான நிலையில் தான் இருக்கிறார். தற்போது சனி பகவான் உங்களின் ஏழாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆவதும் நல்ல பலன்களை தான் தரும். இதை கண்டக சனி என்று அழைப்போம். காதல் உறவில் இனிமை பிறக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
வெளியூர், வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளை பற்றிய கவலை நீங்கும். அவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீண் விரயம் குறையும். வருவாயும் ஓரளவுக்கு சீராக இருக்கும். ஆன்மிகம் சார்ந்த பயணங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
கணவன் - மனைவி உறவில் மட்டும் சிக்கல்கள் ஏற்படும். சிலர் பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். பணியிட மாற்றம் உள்ளிட்ட காரணங்களாலும் பிரிவு நிகழும். தொழில் கூட்டாளிகளுடனும் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். சனி ராசியை பார்ப்பதால் பிடிவாதம் அதிகரிக்கும். இதனால் உறவுகளில் மன வருத்தம் ஏற்படும்.
ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். வார்த்தைகளில் கவனம் தேவை. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ள வேண்டும். முதலீடு, பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. விட்டுக் கொடுத்து செல்வதால் நன்மை பிறக்கும்.












Click it and Unblock the Notifications