சனிப்பெயர்ச்சி: துலாம், விருச்சிகத்துக்கு அடிக்கும் ஜாக்பாட்.. முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் நிகழவுள்ள முக்கிய கிரக பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். மற்ற கிரகங்களை விட ராசியில் அதிக காலம் பயணிப்பது சனி பகவான் தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். இந்த சனிப்பெயர்ச்சியில் துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு பலன்கள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொகுப்பில் சனிப்பெயர்ச்சியால் துலாம் மற்றும் விருச்சிகம் ராசியினருக்கு ஏற்படப் போகும் மாற்றம் குறித்து பார்க்கலாம்.

Sani peyarchi Rasi palan

துலாம்: இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு எல்லாவற்றிலும் நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றிகளை குவிப்பீர்கள். நினைத்த காரியங்கள் எல்லாமே ஒவ்வொன்றாக நிறைவேறும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கொட்டப் போகின்றன.

நீண்ட காலமாக யோசித்து சொந்த வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்குவீர்கள். மனதுக்கு பிடித்தபடியான வாகனங்களை வாங்குவீர்கள். சனிப்பெயர்ச்சி மட்டுமல்லாமல் மே மாதம் நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியும் அதைத்தொடர்ந்து நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு அருமையாக உள்ளது.

குரு பார்வை, 11 ஆம் இடத்தில் கேது வருவதால் அடுத்த இரண்டு வருடங்கள் உங்களுக்கு மிக மிக சிறப்பாக உள்ளது. கடந்த கால சோதனைகள் விலகி மனதில் நிம்மதி பிறக்கும். நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். சோதனைள் தீரும். பண வரவு உண்டாகும். புதிய வாழ்க்கை அமையும். நன்மைகள் உண்டாகும். கணவன், மனைவி உறவில் அன்பு பெருகும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேரன், பேத்தி கிடைக்கும் யோகம் உண்டாகும். தசா புத்தி அமைக்கேற்ப நல்லவை மட்டுமே நடக்கும் யோக காலமாக துலாம் ராசியினருக்கு இருக்கும். வீட்டில் ஆதரவு உண்டாகும். பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். புதிய கடன்கள் வளர்ச்சிக்கான கடன்கள் அமையும். வீடு, வாகனங்கள் அமையும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். இழந்த பெயரை மீண்டும் பெறுவீர்கள்.

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். பிரகாசமாகவும், தைரியம், புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வயதிற்கேற்ப உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து விஷயங்களும் கிடைக்கும். பிரச்சனைகள் தீரக்கூடிய அமைப்பாக இருக்கும். 100 மதிப்பெண் பெறும் அளவுக்கு நிறைவான யோகங்களைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி என்று சொல்லக்கூடிய நான்காம் இடத்து சனி 5 ஆம் இடத்துக்குச் செல்கிறார். ராசிநாதன் 6 மாதம் படாதபாடு பாடாய் படுத்தியிருக்கும். ஆனாலும் ராசியை குரு பார்ப்பது நல்ல அமைப்பாக இருக்கும். 5 ஆம் இடத்தில் சனி வந்தாலே குழந்தைகள் விஷயத்தில் கவலைகள் ஏற்படும் அமைப்பு உண்டாகும்.

நடுத்தர வயது இருப்பவர்களுக்கு குழந்தைகளால் ஏதேனும் ஒரு வகையில் கவலை, பிரிவு ஏற்படும் அமைப்பு உண்டாகும். திருமணம், வேலை போன்ற விஷயங்களால் பிரியும் காலம் உண்டாகும். அது சுபப் பிரிவாக இருக்கும். பிள்ளைகளைப் பற்றிய எண்ணங்கள் வேறு விதமாக மாறும். என்ன செய்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றும்.

5 ஆம் இடத்தில் சனி வருவதால் பெரிய சோதனைகள் உண்டாகாது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய புதிய எண்ணங்கள் உண்டாகும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம், வளர்ச்சிக்கான காலகட்டமாக இந்த காலகட்டம் உங்களுக்கு இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+