சனி வக்ர நிவர்த்தி 2025: கடக ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்
சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கடக ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
13.7.25 தேதியில் இருந்து 27.11.25 தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருக்கிறார். சுமார் கடந்த 4 மாதங்களாக, அதாவது 137 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் வருகிற 28.11.25 தேதி (கார்த்திகை 12 ஆம் தேதி) வக்ர நிவர்த்தி அடைகிறார். மீனம் ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 வருடத்தின் நிறைவில் இருக்கும் நிலையில், இது இந்த வருடத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணிக்க போகிறார்.

சனி வக்ர நிவர்த்தி
பொதுவாக சனி பகவான் தொழிலுக்கு காரணமானவர். வக்ர கதியால் கடந்த 4.5 மாதங்களாக தொழிலில் ஏராளமான பிரச்சனைகள் இருந்திருக்கும். அப்படி உத்யோகம், தொழிலில் பிரச்சனைகள் இருந்தவர்களுக்கு இப்போது அது நிவர்த்தியடைய போகிறது. சனி பகவான் தன் இயல்பு நிலைக்கு திரும்பு போவது சற்று நிம்மதியளிக்கும் காலமாக இருக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்க போகிறது. இதனால் கடக ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
கடகம்
கடக ராசிக்கு 137 நாட்களாக சனி பகவான் வக்கிரமாக மீன மனையில் அமர்ந்திருந்தார். வரும் 28 ஆம் தேதியன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி பகவான் உங்களுக்கு 7க்கு உரியவர். திருமணம், கூட்டாளி ஸ்தானம், அஷ்டாமதிபதியான சனி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருந்ததால் உங்களுக்கு வர வேண்டிய பாக்கியங்களை தடுத்திருக்கும். நீங்கள் செய்திருந்த நல்ல விஷயங்களில் கூட குறை கண்டிருப்பார்கள். அது போன்ற நிலைமைகள் அனைத்தும் மாறும்.
அங்கீகாரம்
உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய சூழல் ஏற்படும். சமூகம் சார்ந்த விஷயங்களில் நல்லது செய்யப் போய் கெட்ட பெயரை சம்பாதித்திருப்பீர்கள். திருமணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நல்ல வரன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். பாக்கியங்களை பெற்றுத் தரும். கூட்டாளிகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கூட்டுத் தொழில் நன்றாக இருக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நல்ல ஆர்டர்கள் கிடைக்கும்.
பணவரவு உண்டு
தொழில் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி விடுதலை அடைவீர்கள். மந்தமாக இருந்து கொண்டே இருந்திருப்பீர்கள். இனி அந்த சூழ்நிலைகள் மாறும். ஜாமீன் கையெழுத்து போட்டு சிக்கியிருப்பீர்கள், பணம் வராமல் தடைபட்டு இருந்திருக்கும். இனி அந்த நிலைமைகள் மாறும். பண வரவு உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கோபம், பிடிவாதத்தன்மை, ஈகோ போன்றவை இனி மாறும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
குழந்தை பாக்கியம்
சனி வக்கிரமாக பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதாலும், குருவின் நட்சத்திரத்தில் பயணிப்பதாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நல்ல மாற்றங்கள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள், ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். கடன்களை அடைக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நல்ல மருத்துவம், நல்ல மருத்துவர்கள் கிடைப்பார்கள்.
வெளிநாட்டு யோகம்
வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் யோகம் ஏற்படும். மனதுக்கு தெம்பு, தன்னம்பிக்கை கிடைக்கும். பண ரீதியில் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். வர வேண்டிய பணங்கள் உங்களை வந்து சேரும்.












Click it and Unblock the Notifications