சனி வக்ர நிவர்த்தி 2025: ரிஷப ராசிக்கு பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. நல்ல நேரம் ஆரம்பமாகிடுச்சு
சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ரிஷப ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
13.7.25 தேதியில் இருந்து 27.11.25 தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருக்கிறார். சுமார் கடந்த 4 மாதங்களாக, அதாவது 137 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் வருகிற 28.11.25 தேதி (கார்த்திகை 12 ஆம் தேதி) வக்ர நிவர்த்தி அடைகிறார். மீனம் ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 வருடத்தின் நிறைவில் இருக்கும் நிலையில், இது இந்த வருடத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணிக்க போகிறார்.

சனி வக்ர நிவர்த்தி
பொதுவாக சனி பகவான் தொழிலுக்கு காரணமானவர். வக்ர கதியால் கடந்த 4.5 மாதங்களாக தொழிலில் ஏராளமான பிரச்சனைகள் இருந்திருக்கும். அப்படி உத்யோகம், தொழிலில் பிரச்சனைகள் இருந்தவர்களுக்கு இப்போது அது நிவர்த்தியடைய போகிறது. சனி பகவான் தன் இயல்பு நிலைக்கு திரும்பு போவது சற்று நிம்மதியளிக்கும் காலமாக இருக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்க போகிறது. இதனால் ரிஷப ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு கடந்த 137 நாட்களாக சனி வக்ர நிலையில் இருந்து உங்களுக்குப் பலனை கொடுத்துக் கொண்டிருந்தார். வரும் 28 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி பகவான் உங்களுக்கு ராஜயோகத்தை கொடுக்கக்கூடிய கிரகம். இதுவரை லாப ஸ்தானத்தில் வக்கிரத்தில் இருந்துதால் பெரிய அளவில் லாபத்தைப் பெற்றிருக்க மாட்டீர்கள். தற்போது சனி வக்ர நிவர்த்தியடைவதால் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நீங்கள் போடும் உழைப்பிற்கேற்ப லாபத்தை அடையும் காலகட்டமாக இருக்கும்.
பாதிப்புகள் நீங்கும்.
தொழிலில் இதுவரை இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். குருவின் நட்சத்திரத்தில் சனி பயணம் செய்யப்போவதால் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள், பாதிப்புகள், தேக்க நிலைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். இனி உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எந்தவகை இடைஞ்சலும் உங்களுக்கு ஏற்படாது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலில் இருந்த வந்த மந்த நிலைகள் மாறும்.
அடுத்தடுத்து அதிர்ஷ்டம்
யோகாதிபதி லாப ஸ்தானத்தில் இருக்கும்போது இதுவரை எதுவும் பெரிதாக இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்திருப்பீர்கள். இனி அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் அனைத்தும் டக்கு டக்கென்று நடக்கும். நிறைய பேருக்கு வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லும் யோகம் ஏற்படும். வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கவில்லை என்பவர்களுக்கு இனி சூப்பரான வேலைகள் கிடைக்கும்.
மாற்றம், முன்னேற்றம்
இடமாற்றம், வியாபார மாற்றம், தொழில் மாற்றம், பதவி உயர்வு என அற்புதமான மாற்றங்களைக் காண்பீர்கள். 90 சதவீதம் நல் பலன்களை சனி பகவான் உங்களுக்கு கொடுக்கப் போகிறார். கடன் பாதிப்புகளில் இருந்து வெளிவரும் யோகம் உண்டாகும். நிறைய பேருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்புகளைக் கொடுத்திருக்கும். கால்கள் சார்ந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். தற்போது அது சரியாகும் நிலை ஏற்படும்.
தொழில்
பெட்ரோலியம், இரும்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு சில குறைகள் இருந்திருக்கும். இனி அந்த நிலைமைகள் மாறும். நல்ல தொழிலாளர்கள் கிடைக்கும் யோகம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தைரிய, வீரியம் நன்றாக இருக்கும். மந்தமாக இருந்த விஷயங்கள் இனி சுறுசுறுப்படையும். மனதில் இருந்து வந்த குழப்பமான நிலைமைகள் மாறும். தொழில், வியாபாரத்தில் அனுகூலமான காலகட்டமாக இருக்கும்
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications