Thulam Rasi Palan: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் துலாம் ராசி.. ராஜயோகம் காத்திருக்கு
சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் துலாம் ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
13.7.25 தேதியில் இருந்து 27.11.25 தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருக்கிறார். சுமார் கடந்த 4 மாதங்களாக, அதாவது 137 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் வருகிற 28.11.25 தேதி (கார்த்திகை 12 ஆம் தேதி) வக்ர நிவர்த்தி அடைகிறார். மீனம் ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 வருடத்தின் நிறைவில் இருக்கும் நிலையில், இது இந்த வருடத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணிக்க போகிறார்.

சனி வக்ர நிவர்த்தி
பொதுவாக சனி பகவான் தொழிலுக்கு காரணமானவர். வக்ர கதியால் கடந்த 4.5 மாதங்களாக தொழிலில் ஏராளமான பிரச்சனைகள் இருந்திருக்கும். அப்படி உத்யோகம், தொழிலில் பிரச்சனைகள் இருந்தவர்களுக்கு இப்போது அது நிவர்த்தியடைய போகிறது. சனி பகவான் தன் இயல்பு நிலைக்கு திரும்பு போவது சற்று நிம்மதியளிக்கும் காலமாக இருக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்க போகிறது. இதனால் துலாம் ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
துலாம்
துலாம் ராசிக்கு கடந்த 137 நாட்களாக சனி பகவான் மீன ராசியில் வக்ர கதியில் இருந்து கொண்டு பல வகையான பாதிப்புகளைக் கொடுத்து கொண்டிருந்தார். நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசிக்கு சனி பகவான் 4, 5க்கு உரியவர். சுகத்தைக் கொடுக்கக் கூடியவர். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் அதிபதி சனி பகவான்.
ராஜயோகம்
துலாம் ராசிக்கு ராஜயோகத்தைக் கொடுக்க கூடியவர் சனி பகவான். வீடு, வண்டி, வாகனம் போன்றவை பலருக்கு அமையாமல் இருந்திருக்கும். அப்படியே அமைந்திருந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை, வில்லங்கத்தை கொடுத்துக் கொண்டிருந்திருப்பார். இந்த வக்ர நிவர்த்திக்குப் பிறகு உங்களுக்கு சுக ஸ்தானம் மேம்படும். வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும்.
குழந்தை பாக்கியம்
தாய் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். தாய்க்கு இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள் நவம்பர் 28 க்குப் பிறகு நீங்கும். குழந்தைகள் நலன் சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த தன்மைகள் நீங்கும். மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். சிறு சிறு கருத்து வேறுபாடுகளும் மறையக் கூடிய காலமாக இருக்கும். 5 ஆம் அதிபதி வக்ர கதியில் இருக்கும்போது குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்பட்டிருக்கும். இனி அந்த நிலைமை மாறி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பாக்கியத்தில் குரு
5 ஆம் அதிபதியான சனி பகவான் குருவின் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். குரு பாக்கிய ஸ்தானத்தில் அமர்வதால் உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். 6 ஆம் இடத்தில் சனி இருப்பது நன்மையைத் தரும். ஆனால், வக்ர காலத்தில் கடன், எதிரி, பிரச்சனையில் சிக்கியிருப்பீர்கள். தற்போது வக்ர நிவர்த்தி அடைவதால் கடனை அடைப்பதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கும். கடனை அடைத்து முடித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கும்.
பிரச்சனை தீரும்
வேலையில் இருந்து வந்த பிரச்சனை தீரும். குழப்பமான நிலைமைகள் மாறும். புதிய வேலைகள் கட்டாயம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வம்பு, வழக்கில் இருந்து விடுதலை பெறுவீர்கள். போட்டித் தேர்வில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் ஏற்படும். ஊர்மாற்றம், இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications