Viruchigam Rasi Palan: விருச்சிக ராசிக்கு இனி அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. 2 குட்நியூஸ் கன்ஃபார்ம்
சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் விருச்சிக ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
13.7.25 தேதியில் இருந்து 27.11.25 தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருக்கிறார். சுமார் கடந்த 4 மாதங்களாக, அதாவது 137 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் வருகிற 28.11.25 தேதி (கார்த்திகை 12 ஆம் தேதி) வக்ர நிவர்த்தி அடைகிறார். மீனம் ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 வருடத்தின் நிறைவில் இருக்கும் நிலையில், இது இந்த வருடத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணிக்க போகிறார்.

சனி வக்ர நிவர்த்தி
பொதுவாக சனி பகவான் தொழிலுக்கு காரணமானவர். வக்ர கதியால் கடந்த 4.5 மாதங்களாக தொழிலில் ஏராளமான பிரச்சனைகள் இருந்திருக்கும். அப்படி உத்யோகம், தொழிலில் பிரச்சனைகள் இருந்தவர்களுக்கு இப்போது அது நிவர்த்தியடைய போகிறது. சனி பகவான் தன் இயல்பு நிலைக்கு திரும்பு போவது சற்று நிம்மதியளிக்கும் காலமாக இருக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்க போகிறது. இதனால் விருச்சிக ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு சனி பகவான் 3க்கு உரியவர். முயற்சி ஸ்தானத்தின் அதிபதி. தைரிய, வீரியத்தைக் கொடுக்க கூடியவர். 4க்கு உரியவர், சுகத்தைக் கொடுக்க கூடியவர். 5 ஆம் இடத்தில் சனி பகவான் வக்ர கதியில் அமர்ந்து பலனைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மன ரீதியில் நிறைய குழப்பங்கள் இருந்திருக்கும். மிக மந்தமாக செயல்கள் நடந்து கொண்டிருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.
ஆதாயம்
வலிமையான முடிவு எடுக்கக் கூடிய தன்மை ஏற்படும். சகோதர வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். உங்களைப் புரிந்து கொள்ளும் தன்மை ஏற்படும். நிறைய பேருக்கு பயணங்களால் அலைச்சல்கள் இருந்திருக்கும். இப்போது அந்த நிலைமைகள் சரியாகும். பயணங்கள் இனி உங்களுக்கு ஆதாயம் ஏற்படும். ஒப்பந்தத்தில் இருந்து வந்த தடைகள், வில்லங்கங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
பிரச்சனைகள் நீங்கும்
ஒப்பந்தம், வியாபாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகி புத்திசாலித்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். விற்பனை சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த மந்த நிலை, தேக்க நிலை மாறும். ரியல் எஸ்டேட் துறை சூடுபிடிக்க ஆரம்பிக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம், அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். 4 ஆம் அதிபதி வக்கிரமாகி சுகத்தில் பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டிருக்கும். வீட்டில் இருந்தாலும் பிரச்சனைகள் வரும் நிலை இருந்திருக்கும். இனி அந்த நிலை மாறி மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
வீடு, வண்டி வாங்கும் யோகம்
புதிய வீடு, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். நவம்பர் 28 ஆம் தேதிக்குப் பிறகு வீட்டை மாற்றிவிடலாம், புதிய வீட்டுக்குச் செல்லலாம், கட்டிய வீட்டை வாங்கலாம், புதிய வாகனங்களை வாங்கலாம் என்பது போன்ற எண்ணங்கள் தோன்றும். எந்த இடத்தை வாங்கலாம் என்பது போன்ற குழப்பங்கள் இருக்கும். இனி தெளிவு கிடைக்கக் கூடிய அமைப்பு ஏற்படும்.
லாபம் கொட்டும்
குழந்தைகள் நலன் சார்ந்த விஷயங்கள் இனி நன்றாக இருக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி, நல்ல வரன்கள் கிடைக்கும். முயற்சியினால் லாபம் கிடைக்கும். சனி வக்ர நிவர்த்தியாகி லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களுடைய முயற்சியால், திட்டத்தால், புத்திசாலினத்தால் லாபத்தை அடையக் கூடிய காலகட்டம். நல்ல வளர்ச்சி நிறைந்த காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications