சனி வக்ர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி.. 6 ராசிகளில் யாருக்கு ஜாக்பாட்.. முழு பலன்கள் இதோ
சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இந்த நிலை மாற்றமானது அனைத்து ராசியினருக்கம் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சனி பகவான் வக்ரமாகியுள்ளார். சனி வக்ர பெயர்ச்சி என்பது சனி பகவான் தனது வழக்கமான இயக்கத்திற்கு மாறாகப் பின்னோக்கிச் செல்லும் காலகட்டமாகும்.

ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். 130 நாட்கள் நீடிக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham)
சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு தூக்கமின்மை ஏற்படும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். துர்க்கை வழிபாடு நன்மையைத் தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய விரயங்கள் ஏற்படும். அதனை சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது.
வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, முதலீடு செய்வது, புதிய பொறுப்புகளுக்கு வருவது போன்ற யோகம் உண்டாகும். வேலை, அரசியல், அதிகாரம் போன்ற விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். எல்லா விஷயங்களையும் சீரமைப்பீர்கள். கணக்கு வழக்குகள், ஆவணங்களை சரியாக வைப்பீர்கள். அற்புதமான ஏற்றங்கள் உண்டாகும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.
பெரிய பொருள்களை வாங்குவீர்கள். மனதிற்குப் பிடித்த சொத்துகளை வாங்குவீர்கள். மீடியா துறையினர், சினிமா துறையினர், அரசியல்வாதிகள், பேச்சாளர்களுக்கு கெளரவம் ஏற்படும். அரசு, ராஜ்ஜியத்தை நிர்வகிப்பவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது ஏற்றத்தைத் தரும்.
ரிஷபம் (Rishabam)
ரிஷப ராசியினருக்கு இழந்ததை எல்லாம் பிடிக்கும் அமைப்பு ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நிறைய சுப காரியங்கள் நடக்கும். வக்ர கதியில் சனி இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் நிறைய நல்லவை நடக்கும். ஏற்றங்கள் ஏற்படும். தடைபட்டிருந்த வண்டி வாகனங்கள், பயணங்கள் எல்லாமே சரியாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு நிறைய யோக பலன்கள் கிடைக்கும்.
லாபத்தில் சனி வருவதால் உங்களை விட்டுப் போனதெல்லாம் மீண்டும் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். உலகத்தை யாரென்று புரிந்து கொள்வீர்கள். நிறைய நன்மைகள் நடக்கும். யோக பலன்கள் அதிகம் கிடைக்கும். செல்வாக்குகள் கூடும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். ரிஷபம் இருக்கும் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.
அப்பா, அம்மாவுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். உங்களால் நிறைய நன்மைகள் உண்டாகும் காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். அலர்ஜி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மகாலட்சுமி வழிபாடு, கனகதாரா ஸ்தோத்திரம் கேட்பது நிறைய பண வரவைக் கொடுக்கும். லாபங்கள் ஏற்படும்.
மிதுனம் ராசி பலன் (Mithunam)
சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டம் குறையும். மன அழுத்தம் தீரும். கண்டங்கள் தீரும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடையும் வாய்ப்பு உண்டாகும்.
உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வது நல்லது. இரவு நேரத்தில் உணவை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகத்தில் எல்லாம் அற்புதமான ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
ஆரோக்கியத்தில் இதயம், கழிவுப் பாதை சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. விஷ்ணு வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். விஷ்ணு சஹஸ்ஹர நாமத்தை ஜெபிப்பது, சுப்பிரமணிய புஜங்கத்தை தினந்தோறும் படிப்பது நல்லது.
கடகம் (Kadagam)
கடக ராசியினருக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் உண்டாகும். பயணங்கள், புதிய அறிமுகங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரிய பெயர், புகழ் உண்டாகும் காலகட்டம். உடனிருப்பவர்களால் சிலவற்றை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பதவிகளை பறிபோகச் செய்யும் நிலை ஏற்படும் என்பதால் கவனம் தேவை.
தேவையில்லாத நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். துணையிடம், பெற்றோரிடம் வாக்குவாதம், சண்டையில் ஈடுபடாமல் சமாதானமாகச் செல்வது நல்லது. புதிய அறிமுகத்தால் சில அனுகூலங்கள், உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். பொறுமை, நிதானத்தை கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும்.
தோள்பட்டை, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. அம்மா, அப்பாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வியாழக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு தானமளிப்பது ஏற்றத்தைத் தரும். திங்கள்கிழமை தோறும் சிவன் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
சிம்மம் ராசி பலன் (Simmam)
சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் சிம்ம ராசியினர் விலை உயர்ந் பொருள்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நிறைய விரயங்கள் ஏற்படும். உறவுகள், புதிய அறிமுகங்கள் என நிறைய விஷயங்கள் நடக்கும். எல்லாவற்றிலும் பார்த்து நடந்து கொள்வது நல்லது. உங்களுக்கு ஆறுதல் சொல்லும் நட்பு, உறவுகளை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அஷ்டமத்தில் சனி வக்ரம் பெறுவதால் பயணங்கள் சமயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆவேசப்படுவது, கோபப்படுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பதட்டம் கொள்ளக் கூடாது. உறவுகளில் கோபம், சண்டையிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
உறவுகளில் ஏற்றம் ஏற்படும். பெற்றோர், பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொறுமையாக இருப்பது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தோலில் அலர்ஜி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. அனுமன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
கன்னி (Kanni)
கன்னி ராசியினர் குடும்பத்தில் துணையிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ஆண்கள் பெண்கள் விஷயத்திலும், பெண்கள் ஆண்கள் விஷயத்திலும் அதீத கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் அடுத்தடுத்து நடக்கும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும். புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். இழந்த பெருமைகள் மீண்டும் கிடைக்கும் யோகம். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள், காயப்படுத்தியவர்கள் முன்பு ஜெயித்து காட்டும் யோகம் உண்டாகும்.
வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். வேற்று மதத்தினரால் உதவிகள் கிடைக்கும். நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும். மகான்கள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அலர்ஜி தொடர்பான விஷயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் மதுரை மீனாட்சியம்மனை நினைத்து வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.


Click it and Unblock the Notifications
