தனுசு, மகர ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சியில் வரும் மாற்றம்.. சொல்லி அடிக்கும் நேரம்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு, மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இந்த நிலை மாற்றமானது அனைத்து ராசியினருக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சனி பகவான் வக்ரமாகியுள்ளார். சனி வக்ர பெயர்ச்சி என்பது சனி பகவான் தனது வழக்கமான இயக்கத்திற்கு மாறாகப் பின்னோக்கிச் செல்லும் காலகட்டமாகும்.

sani-vakra-peyarchi-dhanusu-and-magaram-rasi-people-will-get-massive-growth

ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். 130 நாட்கள் நீடிக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு, மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன் (Dhanusu)

சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துணையைப் பற்றி மற்றவர்களிடம் தவறாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். லாபங்கள் அதிகரிக்கும். அனுகூலம் காணப்படும். பொறுமையாக இருந்து எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொள்வது நல்லது.

உத்தியோகத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். வியாபாரம் படிப்பில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அதிகளவில் சுபவிரயம் ஏற்படும் நல்ல காலகட்டம்.

நிறைய நீர் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கழுத்து, முதுகு வலி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. மேல்மலையனூர், அங்காளம்மனை தினமும் நினைத்து வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம் ராசி பலன் (Magaram)

மகர ராசியினருக்கு எல்லா விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். துணை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இருக்கக் கூடாது. நிறைய பண வரவு ஏற்படும். வண்டி வாங்குவது, தொழில் செய்வது போன்ற யோகங்கள் உண்டாகும்.

வீடு கட்டுவது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது போன்ற அமைப்பு ஏற்படும். வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்து தனித் தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். விவசாயம் தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும். ஆச்சரியமான முன்னேற்றங்கள் உண்டாகும். ஆடு வளர்ப்பது, கோழி வளர்ப்பது போனற யோகம் உண்டாகும். பெயர், புகழ் வரக்கூடிய நல்ல காலகட்டம்.

பெரிய அனுகூலம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். முதுகு வலி, படபடப்பு அதிகரிக்கும். கோளார் பதிகத்தை தினந்தோறும் வாசிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+