Sani Vakra Peyarchi மேஷம் இனி ஆஸம்.. சனி பகவானால் மாற போகும் வாழ்க்கை
சனிவக்ர பெயர்ச்சி: கிரகங்களில் மிகவும் வலிமையானவர் சனி பகவான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்பது ஜோதிட பழமொழி. சனி பகவானின் ஒவ்வொரு நகர்வும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட சனி பகவான் நாளை மறு நாள் வக்ர நிலைக்கு செல்கிறார். அடுத்த 4 மாதங்கள் இதன் மூலம் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். சனி வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
சனி பகவான் ஜூலை 26 ஆம் தேதி வக்ர நிலை ஆகிறார். பொதுவாக வக்ர நிலையில் சனி பின்னோக்கி செல்வார். இந்த முறை இருக்கிற கிரகத்திலேயே வக்ரம் ஆகிறார்.

தற்போது மீனராசியில் உள்ள அவர், அந்த ராசிக்குள்ளேயே வக்ரம் ஆகிறார். சுமார் 4 மாதங்கள் சனி வக்ர நிலையில் தான் இருப்பார் டிசம்பர் 10 ஆம் தேதி தான் வக்ர நிவர்த்தியடைகிறார். பின்னோக்கி சென்ற சனி பகவான் முன்னோக்கி வருவார். சனி தான் நம் வாழ்க்கையில் கல்வி, தொழில், உத்யோகம், குடும்பம், முடிவுகள் எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பார். இந்த பெயர்ச்சியில் மேஷ ராசிக்கு கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசி மற்றும் லக்னத்திற்கு நல்ல பலன்களை கொடுக்கும். இதுவரை இருந்த தடைகள் விலகும். கடந்த காலங்களில் நீங்கள் திட்டமிட்டு வெறுத்து ஒதுக்கிய திட்டங்களை செயல்படுத்த இப்போது சரியான காலம். இழுபறியான விஷயங்கள் பனி போல விலகி நல்லவை படிப்படியாக நிறைவேறும். உத்யோகத்தில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டியிருக்கும். தொழிலில் எதிர்பாராத ஏற்றம் காணப்படும். நீங்கள் விதைத்த விதைக்கு பலன் உண்டு.
வெற்றி மேல் வெற்றி
குரு பார்வையும் இருக்கிறது. முயற்சிகள் வெற்றியாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு நிச்சயம் இருக்கும். பழைய கடன் குறையும். சுப செலவுகளுக்காக புதிய கடன் வாங்குவீர்கள். உத்யோகத்தில் இருந்த நெருக்கடி முழுமையாக விலகும். புதிய எண்ணங்கள் பிறக்கும். தெளிவாக திட்டமிட்டு இறங்கினால் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்தபடியான நல்ல உத்யோகம் தேடிவரும். பெரிய மனிதர்களின் தொடர்பு உருவாகும்.
வெளிநாடு வாய்ப்பு
எதிலும் மனம் தளராமல் முயற்சிகளை நோக்கி பயணிப்பது அவயம். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. கல்வியில் இருந்த பின்னடைவுகள் சரியாகி முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு வாய்ப்புகள் வெற்றிகரமாக மாறும். பண வரவு அதிகரிக்கும். கை, கால் வலி, ஜவ்வு பிரச்சனை, எலும்பு பிரச்சனைகள் சரியாகும். ஆரோக்கியம் மேம்படும். புதிய வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பயணங்கள் அதிகரிக்கும்.
முன்னேற்றம்
சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த மனசிக்கல்கள் சரியாகும். நெருங்கிய உறவுகளுடன் இருந்த விரிசல் சரியாகும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் கூடும். அடுத்த 138 நாட்கள் முன்னேற்றத்துக்கு வித்திடும். உங்கள் எதிரிகள் பலவீனமாவார்கள். உங்களை பற்றி புரளி பேசுவார் வாயடைத்து போவார்கள். அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆஞ்சிநேயர் கோயில் சென்று வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
