சனி வக்ர பெயர்ச்சி: 138 நாட்களில் மேஷ ராசிக்கு நடக்கும் சூப்பர் மாற்றம்.. சனி பகவான் தரும் நிம்மதி!

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

sani-vakra-peyarchi-mesham-rasi-to-witness-financial-gains-and-relief-during-the-138-day-sani-vakra

சனி வக்ர பெயர்ச்சி

அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.

அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு சனி வக்ரம் பெற்றுள்ளதால் இதுவரை ஏழரை சனியாக இருந்தவர் இப்போது அதிலிருந்து விடுபட்டு, 11 ஆம் இடத்திற்குண்டான பலன்களை கொடுக்கப் போகிறார். 12 ஆம் இடத்திற்கு சனி வருவதால் நிறைய தூக்கத்தை கெடுத்திருப்பார். வேலைப் பளு, தூக்கமின்மை, இரவு நேரத்தில் குடும்பத்தில் சண்டை என பல கோணங்களில் இதுவரை தூக்கத்தை இழந்திருப்பீர்கள்.

138 நாட்கள்

இனி வரக்கூடிய 138 நாட்களில் அற்புதமான தூக்கத்தைப் பெறுவீர்கள். விடுதலை பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் அந்த இடம் கெட்டுப் போகாது. பெற்றோர்கள் பிள்ளைகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் திருமணம், படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற விஷயங்களில் கவனமாக முடிவெடுக்கி வேண்டும்.

பணவரவு

பண வரவு அற்புதமாக இருப்பதால் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். மிகப்பெரிய லாபங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துகள் கிடைக்கும். குலதெய்வ கோயில்களுக்குச் சென்று வருவது, பிள்ளைகள் சார்ந்த முடிவுகளை எடுக்கும் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது ஏற்றத்தைக் கொடுக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியைக் கண்டு பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+