சனி பெயர்ச்சி பலன் 2023: வக்ரமடையும் சனியின் பார்வை..சந்தோஷமா? சங்கடமா? யாருக்கு ராஜயோகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்ப ராசியில் பயணிக்கும் சனிபகவான் விரைவில் வக்ரநிலையில் சஞ்சரிக்கப் போகிறார். சனி மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி. சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 டிகிரியில் இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிப்பார் சனிபகவான். அதாவது சூரியனுக்கு 9ஆம் வீட்டில் சனி வரும் போது வக்ரம் பெறுகிறார் சூரியனுக்கு 5ஆம் வீட்டில் சனி வரும் போது வக்ர நிவர்த்தி அடைகிறார்.

சனி வக்ரம்: சனி ஏற்கனவே மெதுவாக நகரும் கிரகம். வக்ரம் பெற்றால் சனிபகவான் இன்னமும் மெதுவாக நகர்வார். சனி வக்ரம் பெற்றால் தான் தர வேண்டிய பலன்களை தர தடையும், தாமதம், இழப்பும் எற்படும். சுப பலன் தர வேண்டிய சனி வக்கிரம் பெற்றால் சுப பலனை தரமாட்டார். சனி போல் கொடுப்பார் இல்லை சனி போல் கெடுப்பார் இல்லை என்று சொல்வார்கள்.

Sani Vakra Peyarchi palan 2023: Sani Peyarchi Palangal 2023 Who will get Rajayogam

ஆயுள்காரகன்: சனி பகவான் சிறந்த ஆயுளை தரக்கூடியவர். ஆயுள்காரகன், தொழில்காரகன் என்றும் போற்றப்படுகிறார். வேலை ஆட்கள் அடிமைகள், கூலி தொழில் செய்வது, கூலி வேலை விவசாயம் இரும்பு,எள் எண்ணெய் வியாபாரம் போன்றவை சனிபகவானின் காரகத்துவங்கள். சனிபகவான் ஒருவரின் ஜாதகத்தில் 3,6 ,7, 10, 11, ஆகிய இடங்களில் இருப்பது சிறப்பு சனி பகவானின் தசா காலம் 19 ஆண்டுகள். அவர் தசாபுத்தி அந்தார காலங்களில் மிகப்பெரிய வெற்றியை தருவார். சனி வக்ரமடையும் கால கட்டத்தில் என்னென்ன நன்மைகளை செய்யப்போகிறார் என்று பார்க்கலாம்.

மேஷம்: உங்களுக்கு இது லாப சனி காலம். சனிபகவானின் பார்வை உங்கள் ராசியில் உள்ள குரு, ராகுவின் மீது விழுகிறது. சனி வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண வருமானம் வரலாம். ஆடம்பர செலவுகளை குறைத்து விடுங்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வரலாம் கவனமும் அக்கறையும் தேவை. உணவு விசயத்தில் கவனம். வெளியில் செல்வதையும் காரமான உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்த்து விடுங்கள்.

ரிஷபம்: அதிர்ஷ்டகரமான கால கட்டம். இந்த கால கட்டத்தில் வரும் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். வரவுக்கு ஏற்ப செலவும் அதிகரிக்கும் சுப செலவுகளாக மாற்றுங்கள். கடன் பிரச்சினைகளை தீர்க்க பணத்தை செலவு செய்யுங்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு அரசு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார மந்த நிலை நீங்கும். குழந்தை இல்லாத தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். அக்கம்பக்கத்தாருடன் மனஸ்தாபங்கள் நீங்கும். சொந்தபந்தங்களின் வீட்டு விஷேசங்களில் அதிகம் பங்கேற்பீர்கள்.

மிதுனம்: சனி வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் உங்களுடைய சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம். எந்த முதலீடுகளையும் பெரிய அளவில் செய்ய வேண்டாம். ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை கவனம் தேவை. பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும். தள்ளிப் போய்கொண்டிருந்த திருமணமும் நல்ல இடத்தில் முடியும். வெகுநாட்களாக நினைத்துக்கொண்டிருக்கும் சுப காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

கடகம்: சனி பகவான் அஷ்டமத்து சனியாக மாறி ஆட்டிப்படைக்கிறார். சனிபகவானின் வக்ர சஞ்சாரம் உங்களுக்கு பாதிப்புகள் நீங்கி நன்மையை கொடுக்கும். வேலை தொழிலில் இருந்த பாதிப்புகள் நீங்கும். சனி எட்டுக்குடையவர். எட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் போது வக்ரமடைகிறார். கூட்டுத்தொழில் நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். முன் யோசனையின்றி பேசிவிட்டு அப்புறம் வருத்தப்பட வேண்டாம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

Sani Vakra Peyarchi palan 2023: Sani Peyarchi Palangal 2023 Who will get Rajayogam

சிம்மம்: கண்டச்சனியாக பயணிக்கும் சனிபகவான் வக்ர சஞ்சாரத்தினால் பாதிப்புகள் குறையும். எதிரிகள் தொல்லை குறையும், மறைமுக போட்டி பொறாமைகள் குறையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வருமானம் அதிகரிப்பதால் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிரிகள் தொல்லை நீங்கும். கோர்ட் வழக்குகள் முடிவுக்கு வரும். சனி வக்ர சஞ்சார காலத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுந்தாலும், குருபகவானின் பார்வையும் கிடைப்பதால் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும்.

கன்னி: ஆறாம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். சனியின் வக்ர சஞ்சாரத்தினால் பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். உங்களுடைய பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். நிதி சிக்கல்கள் தீரும். திடீர் அதிர்ஷ்டங்களும் பண வருமானமும் வரும். இந்த கால கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.
வம்பு வழக்குகளில் இருந்து வந்த பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். நோய் பாதிப்புகள் முடிவுக்கு வரும்.

துலாம்: சனி பகவான் இப்போது ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வையும் கிடைப்பதால் வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களுக்கு இருந்த இடைஞ்சல்கள் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் தீரும். குடும்ப வாழ்க்கையில் குதூகலமாக இருப்பீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படலாம். பண விவகாரங்களில் கவனமாக இருக்கவும். சனி வக்ரமாக இருக்கும் கால கட்டத்தில் உங்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும் என்றாலும் உங்களுடைய உடல் ஆரோக்கியத்திலும் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அர்த்தாஷ்டம சனியால் சில சங்கடங்களை சந்தித்து வந்தீர்கள். சனியின் வக்ர சஞ்சார கால கட்டத்தில் நீங்க உங்களுக்கு வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடைய அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் அம்மா வழி உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தால் இப்போதைக்கு வேண்டாம் தவிர்த்து விடவும். யாரை நம்பியும் பணத்தை கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்.

தனுசு: இந்த வக்ர சனிப்பெயர்ச்சியால் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள், பாதிப்புகள் தீரும். சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்படும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசி முடிவு செய்யலாம். நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும் தேவைகள் நிறைவேறும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இது ஏழரை சனியில் பாத சனி காலம். உடல் நல பிரச்சினை, செலவுகள் ஏற்பட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் இந்த கால கட்டத்தில் சனி பகவான் வக்ரமடைகிறார். ஆட்சி பெற்ற சனி வக்ரமடைவதால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். இந்த காலகட்டத்தில் புதிய பிசினஸ் செய்வதைப் பற்றி யோசிக்கக் கூட வேண்டாம். வீட்டிலும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. யோசித்து நிதானமாக பேசுவது நல்லது.

கும்பம்: இது ஜென்ம சனி காலமாகும். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம். கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. சனி உங்கள் ராசி அதிபதி ஆட்சி பெற்ற சனி வக்ரமடைவதால் உங்களுக்கு ஏற்பட்ட பண பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். உடல் பிறந்தவர்களுடன் பேசும் போது கவனம் அவசியம். வேலை விசயத்தில் கவனம் தேவை. பொறுப்போடு செயல்படவும். இருக்கும் வேலையை விட்டு விட்டு இப்போதைக்கு புது வேலைக்கு மாற வேண்டாம். தாய் வழி உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இந்த கால கட்டத்தில் வேண்டாம். பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு இல்லை.

மீனம்: உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி ஏழரை சனியில் விரைய சனி காலமாகும். விரைய செலவுகள் அதிகரிக்கும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீடு பத்திரமாக இருக்கும். பங்குச்சந்தைகளில் இந்த கால கட்டங்களில் நீங்கள் செய்யும் முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். சின்னச் சின்ன உடல் நலப்பிரச்சினைகள் வரலாம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வெயில் நேரத்தில் வெளியே சுற்றுவதை தவிருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+