சனி பெயர்ச்சி பலன் 2023: கும்பத்தில் வக்ர சனி.. தீபாவளிக்கு முன் யாருடைய வாழ்க்கையில் சரவெடி
சென்னை: கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் ஐப்பசி மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். தீபாவளிக்கு முன்பாகவே சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்க்கலாம்.
சனிதான் தொழில் காரகன். சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி. ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும். ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி பகவான். சனி பெயர்ச்சி ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகத்திற்கு இடம்மாறுதல் அடைவது. சனி வக்ரம் அடைதல் என்பது அவர் பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும். சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம்.

மேஷம்: சனி பகவான் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும். அவசரப்பட்டு வேலையை விடுவதோ அலல்து வேறு வேலைக்கு முயற்சிப்பதோ கூடாது. கவனமாகச் சிந்தித்து செயல்படுதல் வேண்டும். விருந்து கேளிக்கைகளில் கவனம் தேவை. உல்லாசப் பயணங்களில் அதிக கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டுப் பின் இனிதே நடந்தேறும். குழந்தைகள் விஷயத்தில் தேவையற்ற மனவருத்தங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். தடைபட்ட பல வேலைகள் நடைபெறும். அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள். நோய்கள் குணமடையும், வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.
ரிஷபம்: சனிபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது தொழில் ஸ்தானமாகும். இது கரும ஸ்தானம். வேலையில் நெருக்கடி நிலை ஏற்படும். தொழிலில் நெருக்கடிகள் ஏற்படும். நல்ல கல்வி உயர்கல்வி அமைய வாய்ப்புகள் அமையும். மேலும் தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை நிலவும். பார்க்கும் வேலையில் அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. காலி மனை, விடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் தேடி வரும்.
மிதுனம்: சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். சனிபகவானுக்கு ஒன்பதாவது இடம். பாக்ய சனியால் எந்த தடையும் இன்றி செயல்கள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. முதலாளி தொழிலாளி உறவு சுமுகமாக இருக்காது. வேலை கிடைப்பதில் தடைகள் ஏற்படும். வேலை கிடைத்தாலும் அலைச்சல்களும் நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் அதிக அக்கறையும் கவனமும் தேவைப்படும்.
கடகம்: உங்களை அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கிறார். இதுவரை தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும் கணவன் - மனைவி இடையே பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். கொடுத்த பணம், பொருட்கள் சற்று தாமதமானாலும் வந்து சேரும். பொது இடங்களில் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி பெற பாடுபட வேண்டி இருக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசிக்க வேண்டும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். கடன் பிரச்னை தீரும். சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, கண்ணில் குறைபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சிம்மம்: சனிபகவான் கண்டச்சனியாக கவலைக்கு ஆளாக்கி வருகிறார். நவம்பர் மாதம் வரைக்கும் வக்ர நிலையில் பின்னோக்கி நகர்வதால் சில நன்மைகள் ஏற்படும்.
இந்த கால கட்டத்தில் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். தாயாரின் உடல் நிலை சீராகும். ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. அடிவயிற்றில் பிரச்சனை, நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்படாமல் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும்.
கன்னி: உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் உள்ள சனியால் அபரிமிதான யோகங்களை பெற்று வரும் நீங்கள் கவலையற்று இருக்கிறீர்கள். சனியின் வக்ர சஞ்சாரத்தினால் அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் தேவையற்ற மன உளைச்சல்கள் அதிகரிக்கும் சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். நெருங்கிய உறுப்பினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். இருக்கும் பொருட்கள் கையை விட்டுப் போகும் நாணயம் தவறி நடக்கும் சூழ்நிலை அமையும். பணவரவு சீராக இருந்து வரும். எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு கிடைக்கும். நவம்பர் வரைக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் அவசியம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications