தனுசு ராசிக்கு வேலையில் வரும் பிரச்சனை.. சனி வக்கிரத்தால் ஏற்படப் போகும் மாற்றங்கள்.. முழு விவரம்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: சனி வக்ர பெயர்ச்சி காலகட்டம் தொடங்கியுள்ளது. 135 நாட்களுக்கு சனி வக்ரமாக மீன ராசியில் இருக்கப் போகிறார். இந்த சனி வக்ரப் பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். ஜூலை மாதம் முதல் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

நல்ல பலன்களை அனுபவித்து வந்தவர்களுக்கு பாதிப்புகளும் ஏற்படும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், ஏற்றங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி, லக்கினக்காரர்களுக்கு 6 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்கிறார். கடன் மேல் கடன் வாங்கும் நிலை ஏற்படும். கேட்கும் விஷயங்களையே திரும்ப திரும்ப வாங்கும் நிலை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் மறைவுப் பகுதி, வயிற்றுப் பகுதியில் பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக பெண் ஊழியரால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு உணவால் பிரச்சனை, வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்படும். மன திடம் உடையும் அளவுக்கு சவால்களைச் சந்திப்பீர்கள்.
மோசமான காலகட்டம்
உபஜெய ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் அடுத்த ஒன்றரை மாத காலத்துக்கு மோசமான காலகட்டமாக இருக்கும். செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் சனியின் வக்கிரப் பார்வையில் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அடிதடி, சண்டை, சச்சரவு ஏற்படும். மன அழுத்தம் உண்டாகும். கல்லூரியில் வேலை செய்பவர்கள், ஆடிட்டர்கல், கலைஞர்கள் வேலைகளைச் செய்வதில் அடுத்த ஒன்றரை மாதத்துக்கு கடும் பிரச்சனைகள் ஏற்படும். சிஸ்டம், அட்மினிஸ்டிரேஷன், ஐடி, கம்யூனிகேஷன், வங்கி, பிளாஸ்டிக் தொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
வேலைவாய்ப்பு
ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் அற்புதமான வேலைவாய்ப்பு கிடைக்கும். மெரிட்டில் சீட் கிடைக்கும். நல்ல தொழில் அமையும். உடனடியாக லோன் கிடைக்கும். திருச்செந்தூர், மதுரையில் கல்லூரியில் சீட் கிடைக்கும். மிகப்பெரிய பாராட்டுகள், சந்தோஷம், மன நிம்மதி உண்டாகும். தனுசு ராசி, லக்கினக்காரர்கள் மாமியாரின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
திருச்செந்தூர் முருகன்
திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை செய்வது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கெட்ட விஷயங்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். முருகப் பெருமானின் படத்தை வைத்து பூஜிப்பது நல்லது. புதிய தொழில், வேலை ஆரம்பித்து பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளதால் முருகப் பெருமானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
கவனம்
சிறிய காயங்கள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. தந்தையின் பல், முகத்தில் பிரச்சனை பாதிப்பை ஏற்படுத்தும். மனைவியின் மார்பகத்தில் பாதிப்பு வரலாம். ஹார்மோன் பிரச்சனைகளால் உங்கள் குழந்தைக்கு குழந்தை பாக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதற்கு சிகிச்சை பெற வேண்டியதிருக்கும். நிறைய பகைகளை சந்திக்கும் நேரமுள்ளதால் முருகப் பெருமானை வழிபடுவது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications