Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி வக்ர பெயர்ச்சி: விருச்சிக ராசிக்கு வீண் சகவாசத்தால் வரும் கண்டம்.. 100% நடந்தே தீரும்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி பலன்: சனி வக்ர பெயர்ச்சி காலகட்டம் தொடங்கியுள்ளது. 135 நாட்களுக்கு சனி வக்ரமாக மீன ராசியில் இருக்கப் போகிறார். இந்த சனி வக்ரப் பெயர்ச்சி காலகட்டத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சனி பகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். ஜூலை மாதம் முதல் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

sani-vakra-peyarchi-palan-2025-viruchigam-rasi-people-will-get-good-benefit-during-this-sani-vakra

நல்ல பலன்களை அனுபவித்து வந்தவர்களுக்கு பாதிப்புகளும் ஏற்படும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், ஏற்றங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி, லக்கினக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்கிறார். 7 ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கிறார். அடுத்த ஒன்றரை மாதத்துக்கு வாழ்க்கை துணைக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். சர்க்கரை உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் மருத்துவமனையில் அனுமதியாகும் சூழல் ஏற்படும். உங்களுக்கு வயிற்றில் பாதிப்புகள் வரும்.

பொற்காலம்

ஜாதகத்தில் மீனத்தில் சனி வக்கிரமாக இருந்தால் உங்களுக்குப் பொற்காலமாக இருக்கும். புதிதாக வேலை, தொழில் ஆரம்பிக்கும், உத்தியோகம், வியாபாரம் ஆரம்பிக்கும் நேரமாக இருக்கும். திருமணமாகாதவவர்களுக்கு திருமணம் நடக்கும். இரண்டாவது குழந்தை பிறக்கும் பாக்கியம் உண்டாகும். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கிரகப்பிரவேஷம் செய்யம் யோகம் உண்டாகும்.

கவனம்

சனி வக்கிரமாக இல்லையெனில் கால் முட்டி அடிபடுவது, தீக்காயம் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் வரும். நண்பன் என்று நினைத்தவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். நண்பர் பிரச்சனைக்கு சென்று நாம் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் சூழல் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். ஆனால், நிறைய பாதிப்புகள் வரும். டிரான்ஸ்பர் கூட பிரச்சனையாக இருக்கும். வரும் 5 மாதம் வரை பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கிறது. இருக்கும் பதவி போகும் நிலை உள்ளது.

மாணவர்கள்

பிஹெச்டி தீசிஸ், கல்லூரி பேராசிரியர், மாணவ, மாணவிகள் பிரச்சனைகளுக்கு உள்ளாகும் சூழல் உள்ளது. கலவரத்தில் மாட்டும் சூழல் உள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, துருக்கி, இஸ்ரேல், கம்போடியா, மலேசியா, தாய்லாந்தில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும், நண்பர்களுக்குள் பிரச்சனை, தவறான நபர்களுடன் தொடர்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணத்தைக் கொடுத்து மற்றவர்களிடம் ஏமாறாமல் இருப்பது நல்லது.

வழிபாடு

வீட்டிற்கு வலதுபுறம் இருக்கும் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்வது, அபிஷேகத்திற்கு கொடுப்பது நன்மை பயக்கும். எள்ளு சாதம் செய்து தானம் கொடுப்பது அற்புதமான மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+