சனி வக்ர பெயர்ச்சி 2026: கோடீஸ்வர யோகம் பெறும் ரிஷப ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் நேரம்

Subscribe to Oneindia Tamil

Sani Vakra Peyarchi Palan: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், ரிஷப ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

sani-vakra-peyarchi-rishabam-rasi-people-will-get-good-luck-and-fortunes-in-this-sani-vakra-peyarch

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு உங்களுக்கு பிரச்சனைகள் வந்தாலும் அதன் மூலம் சில நன்மைகளும் கிடைக்கும். பாக்கியாதிபதியாக உங்களுக்கு சனி பகவான் இருப்பதால் சகல நன்மைகளையும் உங்களுக்கு கொடுக்கப் போகிறார். லாப சனி வக்கிரமாகி உள்ளது ஏராளமான நன்மைகளைத் தரும். குரு பார்வையும் உள்ளது. நிறைய ஏற்றங்களைப் பெறுவீர்கள். உறவுகள் தொடர்பான பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உறவினர், நண்பர்கள், துணைக்கு நிறைய பரிசுகளைக் கொடுப்பார்கள்.

அனுகூலம்

காதல், திருமண விஷயங்களில் இருந்து சிறு சிறு கருத்து வேறுபாடு, முரண்பாடுகள். பிரிந்திருக்கும் தம்பதிகள் மீண்டும் சேரும் யோகம் உண்டாகும். மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல சீட் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்புவோர் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்த கோர்ஸ், கல்லூரிகள் கிடைக்கும். படித்த முடிந்த மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கும்.

இளைய பருவத்தினர் காதல் விவகாரத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். அரசுத் தேர்வு எழுதுவோருக்கு தேர்ச்சி பெறும் யோகம், அரசு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் சொல்வதை உங்கள் துணை தவறாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது. குழந்தைகளை நினைத்து அதிகம் கவலைப்படுவீர்கள்.

முன்னேற்றம்

குலதெய்வ கோயிலுக்குச் செல்வது தடைபடும். ஆனால் அந்த தடையை மீறி வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அப்பாவின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மூத்த ஆணின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. எந்தவித கம்யூனிகேஷனிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பேசும் வார்த்தைகள் தவறாக செல்வதற்கும், அதன் மூலம் பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

உங்களுடைய விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால் வாழ்க்கைத் தரம் மேம்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். முதலீடு செய்யும் விஷயங்கள் மூலமாக லாபம் பெறுவீர்கள். உங்களுடைய பட்ஜெட்டுக்கு தகுந்தவாறு நிலம், இடம் கிடைக்கும். எப்போதோ வாங்கி போட்டு வைத்திருந்த இடங்கள் இப்போது லாபத்தைத் தரும்.

சொத்து சேரும்

பூர்வீக சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டு. பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தங்கம், வெற்றி வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். வாழ்க்கைத் தரம் மேம்படும். நல்ல முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவீர்கள். தினந்தோறும் தயிரை ஏதாவது ஒருவகையில் எடுத்துக் கொள்வது நன்மையைத் தரும். அல்லது தயிரை தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+