Sani vakra peyarchi: மேஷம், ரிஷபம் ராசியினருக்கு பிரகாசமான மாற்றம்.. சனி வக்ர பெயர்ச்சி முழு பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷம், ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இந்த நிலை மாற்றமானது அனைத்து ராசியினருக்கம் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சனி பகவான் வக்ரமாகியுள்ளார். சனி வக்ர பெயர்ச்சி என்பது சனி பகவான் தனது வழக்கமான இயக்கத்திற்கு மாறாகப் பின்னோக்கிச் செல்லும் காலகட்டமாகும்.

sani-vakra-peyarchi-sani-vakra-peyarchi-palangal-for-mesham-rasi-people

ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். 130 நாட்கள் நீடிக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷம் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன் (Mesham)

சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு தூக்கமின்மை ஏற்படும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். துர்க்கை வழிபாடு நன்மையைத் தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய விரயங்கள் ஏற்படும். அதனை சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது.

வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, முதலீடு செய்வது, புதிய பொறுப்புகளுக்கு வருவது போன்ற யோகம் உண்டாகும். வேலை, அரசியல், அதிகாரம் போன்ற விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். எல்லா விஷயங்களையும் சீரமைப்பீர்கள். கணக்கு வழக்குகள், ஆவணங்களை சரியாக வைப்பீர்கள். அற்புதமான ஏற்றங்கள் உண்டாகும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.

பெரிய பொருள்களை வாங்குவீர்கள். மனதிற்குப் பிடித்த சொத்துகளை வாங்குவீர்கள். மீடியா துறையினர், சினிமா துறையினர், அரசியல்வாதிகள், பேச்சாளர்களுக்கு கெளரவம் ஏற்படும். அரசு, ராஜ்ஜியத்தை நிர்வகிப்பவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது ஏற்றத்தைத் தரும்.

ரிஷபம் (Rishabam)

ரிஷப ராசியினருக்கு இழந்ததை எல்லாம் பிடிக்கும் அமைப்பு ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நிறைய சுப காரியங்கள் நடக்கும். வக்ர கதியில் சனி இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் நிறைய நல்லவை நடக்கும். ஏற்றங்கள் ஏற்படும். தடைபட்டிருந்த வண்டி வாகனங்கள், பயணங்கள் எல்லாமே சரியாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு நிறைய யோக பலன்கள் கிடைக்கும்.

லாபத்தில் சனி வருவதால் உங்களை விட்டுப் போனதெல்லாம் மீண்டும் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். உலகத்தை யாரென்று புரிந்து கொள்வீர்கள். நிறைய நன்மைகள் நடக்கும். யோக பலன்கள் அதிகம் கிடைக்கும். செல்வாக்குகள் கூடும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். ரிஷபம் இருக்கும் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.

அப்பா, அம்மாவுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். உங்களால் நிறைய நன்மைகள் உண்டாகும் காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். அலர்ஜி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மகாலட்சுமி வழிபாடு, கனகதாரா ஸ்தோத்திரம் கேட்பது நிறைய பண வரவைக் கொடுக்கும். லாபங்கள் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+