Sani vakra peyarchi: சனியின் அருளால் மிதுனம், கடக ராசிக்கு வரும் அதிர்ஷ்டம்.. இந்த விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மிதுனம், கடக ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இந்த நிலை மாற்றமானது அனைத்து ராசியினருக்கம் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சனி பகவான் வக்ரமாகியுள்ளார். சனி வக்ர பெயர்ச்சி என்பது சனி பகவான் தனது வழக்கமான இயக்கத்திற்கு மாறாகப் பின்னோக்கிச் செல்லும் காலகட்டமாகும்.

Sani vakra peyarchi

ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். 130 நாட்கள் நீடிக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மிதுனம், கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன் (Mithunam)

சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டம் குறையும். மன அழுத்தம் தீரும். கண்டங்கள் தீரும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடையும் வாய்ப்பு உண்டாகும்.

உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வது நல்லது. இரவு நேரத்தில் உணவை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகத்தில் எல்லாம் அற்புதமான ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

ஆரோக்கியத்தில் இதயம், கழிவுப் பாதை சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. விஷ்ணு வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். விஷ்ணு சஹஸ்ஹர நாமத்தை ஜெபிப்பது, சுப்பிரமணிய புஜங்கத்தை தினந்தோறும் படிப்பது நல்லது.

கடகம் (Kadagam)

கடக ராசியினருக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் உண்டாகும். பயணங்கள், புதிய அறிமுகங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரிய பெயர், புகழ் உண்டாகும் காலகட்டம். உடனிருப்பவர்களால் சிலவற்றை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பதவிகளை பறிபோகச் செய்யும் நிலை ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

தேவையில்லாத நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். துணையிடம், பெற்றோரிடம் வாக்குவாதம், சண்டையில் ஈடுபடாமல் சமாதானமாகச் செல்வது நல்லது. புதிய அறிமுகத்தால் சில அனுகூலங்கள், உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். பொறுமை, நிதானத்தை கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும்.

தோள்பட்டை, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. அம்மா, அப்பாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வியாழக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு தானமளிப்பது ஏற்றத்தைத் தரும். திங்கள்கிழமை தோறும் சிவன் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+