Sani vakra peyarchi: சிம்மம், கன்னி ராசிக்கு வரும் ராஜயோகம்.. 3 விஷயங்களில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் சிம்மம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இந்த நிலை மாற்றமானது அனைத்து ராசியினருக்கம் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சனி பகவான் வக்ரமாகியுள்ளார். சனி வக்ர பெயர்ச்சி என்பது சனி பகவான் தனது வழக்கமான இயக்கத்திற்கு மாறாகப் பின்னோக்கிச் செல்லும் காலகட்டமாகும்.

sani-vakra-peyarchi-sani-vakra-peyarchi-palangal-for-simmam-and-kanni-rasi-people

ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். 130 நாட்கள் நீடிக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் சிம்மம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன் (Simmam)

சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் சிம்ம ராசியினர் விலை உயர்ந் பொருள்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நிறைய விரயங்கள் ஏற்படும். உறவுகள், புதிய அறிமுகங்கள் என நிறைய விஷயங்கள் நடக்கும். எல்லாவற்றிலும் பார்த்து நடந்து கொள்வது நல்லது. உங்களுக்கு ஆறுதல் சொல்லும் நட்பு, உறவுகளை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அஷ்டமத்தில் சனி வக்ரம் பெறுவதால் பயணங்கள் சமயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆவேசப்படுவது, கோபப்படுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பதட்டம் கொள்ளக் கூடாது. உறவுகளில் கோபம், சண்டையிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

உறவுகளில் ஏற்றம் ஏற்படும். பெற்றோர், பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொறுமையாக இருப்பது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தோலில் அலர்ஜி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. அனுமன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

கன்னி (Kanni)

கன்னி ராசியினர் குடும்பத்தில் துணையிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ஆண்கள் பெண்கள் விஷயத்திலும், பெண்கள் ஆண்கள் விஷயத்திலும் அதீத கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் அடுத்தடுத்து நடக்கும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும். புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். இழந்த பெருமைகள் மீண்டும் கிடைக்கும் யோகம். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள், காயப்படுத்தியவர்கள் முன்பு ஜெயித்து காட்டும் யோகம் உண்டாகும்.

வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். வேற்று மதத்தினரால் உதவிகள் கிடைக்கும். நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும். மகான்கள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அலர்ஜி தொடர்பான விஷயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் மதுரை மீனாட்சியம்மனை நினைத்து வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+