Sani vakra peyarchi: ராஜயோகம் பெறும் துலாம், விருச்சிகம்.. சனி வக்ரபெயர்ச்சியில் யாருக்கு அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் துலாம், விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இந்த நிலை மாற்றமானது அனைத்து ராசியினருக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சனி பகவான் வக்ரமாகியுள்ளார். சனி வக்ர பெயர்ச்சி என்பது சனி பகவான் தனது வழக்கமான இயக்கத்திற்கு மாறாகப் பின்னோக்கிச் செல்லும் காலகட்டமாகும்.

sani-vakra-peyarchi-sani-vakra-peyarchi-palangal-for-thulam-and-viruchigam-rasi-people

ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். 130 நாட்கள் நீடிக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் துலாம், விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன் (Thulam)

சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு நிறைய நன்மைகள் நடக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த மன வருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த மன வருத்தங்கள் தீரும். தொழில் ரீதியாக அற்புதங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். அடுத்தடுத்து நல்ல முன்னேற்றங்கள் காணப்படும்.

எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். யோக பலன்களை அதிகம் பெறும் காலகட்டம். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் ஏற்றமும், சந்தோஷமும் ஏற்படும். வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில் மாற்றங்களை மேற்கொள்வீர்கள். உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் நடக்கும் காலகட்டம்.

தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் நீங்கும். அடுத்தடுத்து நிறைய நன்மைகள் நடக்கும். உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். உத்தியோகம் ரீதியாக எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதை ஏற்படும். வேறு வேலை கிடைத்த பிறகு இருக்கும் வேலையை விடுவது நல்லது.

காது, மூக்கு, தொண்டை, அலர்ஜி, சைனஸ் தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்கவேண்டும். விஷ்ணு வழிபாடு, பள்ளி கொண்ட பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

விருச்சிகம் ராசி பலன் (Viruchigam)

விருச்சிகம் ராசியினருக்கு பிள்ளைகளிடம் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. வேற்று மொழி மனிதர்களால் அதிகளவில் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், பழக்கவழக்கங்கள், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேற்று மொழி மனிதர்களால் அதிகளவில் ஆதாயம் உண்டாகும். கடல் கடந்து தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.

விருது, அங்கீகாரம் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். உடனிருப்பவர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உறவுகளால் பாதிப்புகள் ஏற்படும். பெற்றோர், பெரியோரால் மன வருத்தங்கள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். உறவுகள், ரத்த பந்தங்கள், தேக ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த விஷயங்கள் பெரிதாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

எதிரிகள் பலமாக மாறும் வாய்ப்புள்ளதால் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். வயிறு, ஜாயிண்டுகளில் ஏற்படும் வலிகளில் கவனம் தேவை. முருகன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வைத்தியநாத சுவாமியை வழிபாடு செய்வது நன்மையைத் தரும். பெற்றோர், பெரியோர் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+