சனி வக்ர பெயர்ச்சி: மீண்டும் மீண்டுமா.. சிம்ம ராசிக்கு 138 நாட்களுக்கு ரெட் அலெர்ட்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால்
சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சனி வக்ர பெயர்ச்சி
அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.
அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசி, சிம்ம லக்னத்தினருக்கு கண்ட சனி காலத்தில் எப்படிப்பட்ட நிலை இருந்ததோ, மீண்டும் அதேபோன்ற ஒரு காலம் அடுத்த 138 நாட்களுக்கு உருவாகியுள்ளது. கண்டக சனி உடல்நலத்தை கெடுக்கும். மனநலத்தை கெடுக்கும். யார் நல்லவர், கெட்டவர், யாரை நம்புவது என்று தெரியாமல் குழப்பம் ஏற்படும். மாய சிந்தனைகள், மனகுழப்பம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
பாதிப்பு
சனி பகவான் உங்கள் ராசியை பார்த்து கொண்டிருக்கிறார். யார் என்ன சொன்னாலும், திட்டினாலும் கவலைப்படாமல் கடந்து செல்ல வேண்டும். வசைபாடுபவர்களிடம் உண்மையை விளக்க சென்றால் அது இன்னும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே எதைப்பற்றியும், யாரின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பது அவசியம். சனி பகவான் நான்காம் இடத்தை பார்க்கிறார். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
முதியோருக்கு ஜீரண பிரச்சனை, மூட்டு வலி, பசியின்மை போன்றவை அதிகரிக்கும். வருகிற டிசம்பர் மாதம் வரை உடல் ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கை வேண்டும். உணவு பழக்கத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சனி பகவான் ஒன்பதாம் இடத்தையும் பார்க்கிறார். பிரச்சனைகளுக்கு கோயில் சென்றால், அங்கு தரிசனம் கூட சரியாக அமையவில்லை என்று புலம்பும் நிலை ஏற்படும். சந்தர்ப்பம் கைமீறி செல்லும்.
பொறுமை
சிம்ம ராசியினர் கடந்த இரண்டரை வருடங்களாகவே பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகளை கடந்து வந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த 138 நாட்களை கடப்பது பெரிய விஷயமல்ல. உங்களின் மனவலிமையால் இதையும் எளிதாக கடக்க முடியும். மனதுக்கு பொறுமை அவசியம். ஓய்வு எடுங்கள். நடப்பதை வேடிக்கை பாருங்கள்.எதற்கும் கருத்து சொல்ல வேண்டியதில்லை. வீட்டு அருகில் உள்ள முருகன் கோயில் சென்று வழிபடுவதும், தினசரி கந்தசஷ்டி கவசம் கேட்பதம் நேர்மறையான சிந்தனைகளை வளர்க்கும்.












Click it and Unblock the Notifications