ராஜா பகவத்தாக மாறும் விருச்சிக ராசி.. சனியின் பார்வையால் அடுத்தடுத்து முன்னேற்றம்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சனி வக்ர பெயர்ச்சி
அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.
அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு சனி பகவான் 5 ஆம் இடத்தில் இதுவரை இருந்தார். இப்போது வக்கிர கதியாவதால் 138 நாட்களுக்கு 4 ஆம் இடத்துக்கான பலன்களை கொடுக்கப் போகிறார். படிக்கும் மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீடு, மனை, கார் வாங்க காத்திருப்பவர்களுக்கு செட்டிலாகும் யோகம் உண்டாகும். சனி 6 ஆம் இடத்தைப் பார்ப்பதால் இதுவரைக்கும் இருந்து வந்த எதிரிகள் ஒழிவார்கள்.
யோகம்
கடன்களை கட்டக்கூடிய யோகம் உண்டாகும். தொலைதூரப் பயணங்கள் மூலம் வெற்றியைப் பெறுவீர்கள். இடமாற்றங்கள் உண்டாகும். வேறு ஊர்களுக்கு, வேறு இடங்களுக்கு, வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு சுய தொழில், சொந்த தொழில் தொடங்கக்கூடிய யோகம் உண்டாகும். சொந்த தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.
கவனம்
புதிய கிளைகளை தொடங்கும் யோகம் உண்டாகும். கூடுதலாக 10 பேருக்கு வேலை போட்டு கொடுக்கக்கூடிய எண்ணங்கள் உருவாகும். நில, புல ஆதாயங்கள் கிடைக்கும். உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்கள் மூலமாக ஒத்தாசைகள் உண்டாகும். சனி பகவானுடைய அடுத்த பார்வை 10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனம் இயக்குபவர்கள் அது சார்ந்த தொழில் செய்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications