ஜாவா சுந்தரேஷனாக மாறும் தனுசு ராசி.. சனி வக்ர பெயர்ச்சியில் சொல்லி அடிக்கும் யோகம்
Sani Vakra Peyarchi Palan: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், தனுசு ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசியினருக்கு 4 ஆம் இடத்தில் சனி இருந்ததால் மன உளைச்சல், கவலைகளில் இருந்திருப்பீர்கள். நிம்மதி இல்லாத தன்மை இருந்திருக்கும். இறக்க குணம் நிறைந்தவராக இருப்பதால் யார் கஷ்டப்பட்டாலும் முன் நின்று உதவுபவராக இருந்திருப்பீர்கள். உச்ச குரு 4 ஆம் இடத்தை பார்ப்பதால் மனம் தெளிவடையும். தெளிவான சிந்தனை பிறக்கும். தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். யார் உங்களிடம் உண்மையாக இருக்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.
திருமண யோகம்
படிப்பு சார்ந்த விஷயத்தில் மேன்மை உண்டாகும். வழக்கறிஞருக்கு படிப்போருக்கு பெயர், புகழ் உண்டாகும். மத்திய அரசு வேலைகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலைமை உண்டாகும். கடைசி நேரத்தில் ஏதாவதொரு அதிர்ஷ்டம் கிடைக்கும். வங்கி, நிதி, ஆடிட்டிங் படிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். செலக்ஷன் ஆனாலும் தள்ளிப்போய் கிடைக்கும் நிலைமை உண்டாகும்.
காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். காதல் அமைப்புகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உங்கள் துணை உங்களைப் புரிந்து கொள்ளும் நிலைமை ஏற்படும். பெற்றோர், பெரியோரால் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஒருவிதமான மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. காதல் திருமணம், பெற்றோர் செய்து வைக்கும் திருமண யோகம் உண்டாகும். உங்களையும், உங்கள் துணையையும் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள்.
யோகமான காலம்
கணவன், மனைவிக்குள் பூசல்கள் இருந்தாலும் வெளியில் தெரியாமல் சமாளித்து சந்தோஷமாக இருப்பீர்கள். சொத்துகள் வாங்குவதற்கான முதல்கட்டப் படிகளை இந்த காலகட்டத்தில் எடுத்து வைப்பீர்கள். நிலம், இடம் பார்ப்பது, லோனுக்கு தயார் செய்வது போன்றவற்றை செய்வீர்கள். இருக்கும் கடனை அடைப்பதற்கான யோகம் உண்டாகும். வண்டி, வாகனம் பழுதாகிக் கொண்டே இருந்தால் புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள்.
பொருளாதார ரீதியாக புத்திசாலித்தனமாக, சாமார்த்தியமாக செயல்படுவீர்கள். ஏதாவதொரு ப்ராப்பர்டிகளை வாங்குவீர்கள். யார் உங்களை மட்டம் தட்டினார்களோ அவர்கள் முன் நின்று காண்பிப்பீர்கள். எல்லா இடத்திலும் சொல்லி அடிக்கும் யோகம் உண்டாகும். மன ரீதியாக தைரியமாக செயல்படுவீர்கள். உங்களுக்குத் தேவையானவற்றை நீங்கள் செய்யத் தொடங்குவீர்கள்.
கவனம்
ஆரோக்கிய குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. காது, மூக்கு, தொண்டை, தலைவலி தொடர்பான பாதிப்புகள் வருவதால் வேலை கெட்டுப்போகும் அமைப்புள்ளதால் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்நிலைக்கு தகுந்த உணவுகளை சாப்பிடுவது நன்மை பயக்கும். வெள்ளை கொண்டை கடலையை டயட்டில் சேர்ப்பது நல்லது. வியாழக்கிழமை அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
