Sani Vakra Peyarchi: கண்டக சனியில் இருந்து கன்னி ராசிக்கு விடுதலை.. இந்த விஷயங்களில் கவனம் தேவை
Sani Vakra Peyarchi Palan: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், கன்னி ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசியினருக்கு கண்டகச் சனி நடந்து கொண்டிருந்தது. இப்போது சனி வக்கிரமாக பெயர்ச்சியாவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். சனி நல்லவராக இருந்தாலும் 7 ஆம் இடத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் எல்லா விஷயங்களிலும் தடை, தாமதம் உண்டாகியிருக்கும். எல்லா விஷயங்களையும் அசல்டாக செய்வது, கவனக் குறைவுடன் செயல்படுவது, மறதி அதிகரிப்பது போன்றவை உண்டாகியிருக்கும்.
ஆரோக்கியமாக இருந்தவர்கள் கூட உடற்பயிற்சியைத் தவிர்ப்பது, தவறான உணவுப் பழக்கங்களை பழகுவது, நண்பர்கள், பார்ட்னர்களுடன் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இந்த இதுபோன்ற எல்லா விஷயங்களும் இனி பரிபூரணமாக மாறும். தள்ளிப்போட்ட விஷயங்களை எல்லாம் இனி அடுத்தடுத்து நடத்தி முடிப்பீர்கள். ஒருமுறைக்கு இருமுறை செக் செய்துவிட்டு வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
வெற்றி மேல் வெற்றி
பிசினஸ் பார்ட்னர்களிடம் கவனமாக இருப்பீர்கள். புதிய பிசினஸ் பார்ட்னர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். 4 ஆம் இடம் வலுவாக இருப்பதால் படிப்பில் டாப் கிளாஸாக இருப்பீர்கள். நன்றாக படிப்பது, நல்ல மதிப்பெண்கள் பெறுவது போன்றவை ஏற்படும். போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் யோகம் உண்டு. மத்திய அரசு வேலைகள், சீருடைப் பணியாளர்கள் ஆகும் வாய்ப்புள்ளது.
நீட் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். திருமண யோகம் உண்டாகும். திருமணத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். துணைக்கும் உங்களுக்கும் இருந்து வந்த பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் எல்லாமே மாறும். அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் துணை சார்ந்த உறவுகள் மேன்மை அடையும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணமாகும் யோகம் உண்டு. காதல் திருமணத்தில் கவனம் தேவை.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உழைப்பிற்கான ஊதியம் கிடைக்கும். வேலை செய்வதற்கான பணம் வந்து சேரும். சொத்து வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அப்பா சொத்துகளை பிரித்துக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். அப்பார்ட்மென்டுகளில் முதலீடு செய்வது தவிர்ப்பது நல்லது. பிசினஸ் கிளைன்ட், பார்ட்னர்கள், மீடியேட்டர்களிடம் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவி பிரச்சனையை வெளியில் பேசாமல் இருப்பது நல்லது.
சோஷியல் மீடியாவில் மெசேஜ் செய்வது, அதை மறைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ரகசியங்களைக் காப்பது நல்லது. உங்கள் வாழ்க்கையை தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்வது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications
