Sani vakra peyarchi: மகர ராசிக்கு சொல்லி அடிக்கும் யோகம்.. தொட்டதெல்லாம் துலங்கும் காலம்
Sani Vakra Peyarchi Palan: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், மகர ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

மகரம்
மகர ராசியினருக்கு சனி பகவான் நிறைய நல்ல மாற்றங்களைக் கொடுக்கும். 3 ஆம் இடத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் பிளானிங் அதிமாக செய்திருப்பீர்கள். ஆனால், அது வெறும் திட்டமாக மட்டுமே இருந்திருக்கும். யார் எப்படி என்பதை சரியாகப் புரிந்து கொள்ளும் தன்மை உங்களுக்கு ஏற்படும். உங்களுடைய திட்டங்களைக் கேட்டு மற்றவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால், உங்களுக்காக அந்த திட்டத்தை பயன்படுத்தவே முடியாது. அதுபோன்ற நிலைமைகள் இனி பரிபூரணமாக நீங்கும்.
முன்னேற்றம்
தன்னம்பிக்கையும், தைரியமும் உங்களுக்கு அதிகரிக்கும். எல்லா முயற்சிகளையும் தைரியமாக எடுத்து முடிப்பீர்கள். 4 ஆம் அதிபதி செவ்வாயாக இருப்பதால் அசாத்திய துணிச்சல் மாணவர்களுக்கு இருக்கும். அதனால், மிகவும் சாதாரணமாக கல்வி விஷயத்தை கையாளுவீர்கள். படிக்கும் மாணவர்களிடம் சிறிய முன்னேற்றமும், பாஸ் மார்க் எடுக்கும் அமைப்பும் உள்ளது.
கணவன், மனைவிக்கிடையே உறவுகள் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இரண்டு வீட்டினரைப் பற்றியும் மாறி மாறி பேசிக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. மூன்றாவது நபரை உங்களுக்குள் வருவதை தவிர்க்க வேண்டும். பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. காதல் விவகாரங்களை நண்பர்களிடம் கொண்டு செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
கடன் தீரும்
பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். முதலீடுகளில் இப்போது லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆயில், பெட்ரோல், கெமிக்கல், கோல்டு ஈடிஎப் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். டிரேடிங் செய்வீர்கள். சமூக வலைதளங்களில் சம்பாதிக்கும் யோகம் உண்டு. கடனை அடுத்தடுத்து அடைத்து முடிப்பீர்கள். வட்டியில்லாமல் மற்றவர்கள் உங்களுக்கு பணம் கொடுத்து உதவுவார்கள். அதன் மூலம் ஒரே ஸ்டிரெட்சில் கடனை அடைத்து முடிப்பீர்கள். உங்களைப் பிடிக்காதவர்கள் தன்னால் விலகிச் செல்வார்கள்.
வழிபாடு
தம்பி, தங்கை என்று யாரிடம் பழகுகிறீர்களோ அவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. அவர்களுக்காக ரிஸ்க் எடுத்து சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். ஏழை எளியோருக்கு மருத்துவத்துக்கு உதவுவது நன்மையைத் தரும். கருப்பட்டியை அதிகம் பயன்படுத்துவது நன்மை பயக்கும். ராமேஸ்வரம் சென்று வருவது உங்களுக்கு சகலவித முன்னேற்றத்தைத் தரும்.


Click it and Unblock the Notifications
