Sani vakra peyarchi: மீன ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. சனியால் வரும் முன்னேற்றம்
Sani Vakra Peyarchi Palan: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், மீன ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

மீனம்
மீன ராசியினருக்கு சனி பகவான் ஜென்ம சனியாக இருக்கிறார். ராசியில் இருக்கும் சனி வக்கிரமாவதாலும், சனிக்கு குரு பகவானின் பார்வை இருப்பதாலும் நிறைய நன்மைகள் கிடைக்கும். சனியினால் எந்தவிதமான பாதிப்பும் உங்களுக்கு ஏற்படாது. தொழிலில் நிறைய பிரச்சனை இருந்திருக்கும். இனி அந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
சுய ஒழுக்கம்
திருமண வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும். 5 ஆம் இடம் வலுவாக இருப்பதால் வைராக்கியம் ஏற்படும். எப்படியாவது படித்துவிட வேண்டும் என்கிற தன்மை பிள்ளைகளுக்கு ஏற்படும். சுய கெளரவம், சுய ஒழுக்கம் மேம்படும். பெற்றோர்கள் உங்களை நினைத்து பெருமைப்படுவார்கள். நினைத்த கல்லூரியில் சீட் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இன்டர்வியூவில் செலக்ட் ஆவது, கேம்பஸில் வேலை கிடைப்பது போன்ற யோகம் ஏற்படும்.
திருமண யோகம்
உங்கள் துணை உங்களை நன்றாகப் புரிந்து கொள்வார்கள். உங்களுடைய பேச்சை கேட்க ஆரம்பிப்பார்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். நன்மதிப்பு உங்கள் மேல் ஏற்படும். திருமணமாகாத இளைஞர்களுக்கு காதல், திருமணம் இவை இரண்டுமே உங்களுக்கு கைகூடும். நல்ல பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். பணம் வாங்கியவர்கள் திருப்பி கொடுப்பார்கள். கடன்களை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
கவனம்
அடகு வைத்த நகைகளை மீட்டெடுப்பீர்கள். வீடு வாசல், சொத்து சுகம் ஏற்படும் அமைப்பு உண்டாகும். தலைமைப் பதவி கிடைக்கும். ரெசிடென்சியில் தலைவராவது, தேர்தலில் போட்டியிடுவது, கட்சியில் சேருவது போன்ற அமைப்பு உள்ளது. உங்கள் திறமையை வெளிக்கொண்டு வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். வேகமாக ஓடுவது, பேருந்தில் படிக்கட்டில் வேகமாக இறங்குவது, படிக்கட்டில் செல்லும்போது போன்றவற்றில் கவனம் தேவை.


Click it and Unblock the Notifications
