சனி வக்ர பெயர்ச்சி: மேஷம் - கன்னி ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட்.. எந்த ராசிக்கு யோகம் தெரியுமா?
Sani Vakra Peyarchi Palan: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசியினருக்கு நல்ல சம்பாத்தியம் இருக்கும். ஆனாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் காசு கையில் நிக்காத தன்மை ஏற்படும். மருத்துவ விரயம் அதிகமாக இருந்திருக்கும். இந்த வீண் செலவினங்கள் எல்லாம் குறையும். 12 ஆம் இடத்தில் சனி வக்கிரமாவதால் உங்களுக்கு நிம்மதியான தூக்கம், நல்ல சாப்பாடு சாப்பிடும் யோகம் உண்டாகும். தினந்தோறும் உடற்பயிற்சியை செய்வீர்கள்.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். பண வரவு அற்புதமாக இருக்கும். அந்தப் பணத்தை சேமிப்பது, முதலீடு செய்வது போன்றவற்றை செய்வீர்கள். பழைய வீடு, பழைய கார் போன்றவற்றை வாங்குவீர்கள். 12 ஆம் இடம் என்பது இல்லறம், தாம்பத்தியத்தைக் குறிக்கும். திருமணமானாலும் இல்லற வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனை, கருத்து வேறுபாடுகள் போன்றவை பரிபூரணமாக நீங்கும்.
பாத சனியில் திருமணம் முடிவாவது போல் வந்து நின்றிருக்கும். சம்மந்தி சண்டை, போன் சண்டை வந்தெல்லாம் கூட நின்றிருக்கும். அந்த தன்மை எல்லாம் பரிபூரணமாக கிடைக்கும். ஆனால் இந்த சனி வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் நல்ல வரன்கள் வந்து சேரும். தொலைதூரத்தில் இருந்து வரன் வரும். அடுத்தடுத்து சுப காரியங்கள் நடப்பது, செட்டிலாகும் யோகம் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு உங்களுக்கு பிரச்சனைகள் வந்தாலும் அதன் மூலம் சில நன்மைகளும் கிடைக்கும். பாக்கியாதிபதியாக உங்களுக்கு சனி பகவான் இருப்பதால் சகல நன்மைகளையும் உங்களுக்கு கொடுக்கப் போகிறார். லாப சனி வக்கிரமாகி உள்ளது ஏராளமான நன்மைகளைத் தரும். குரு பார்வையும் உள்ளது. நிறைய ஏற்றங்களைப் பெறுவீர்கள். உறவுகள் தொடர்பான பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உறவினர், நண்பர்கள், துணைக்கு நிறைய பரிசுகளைக் கொடுப்பார்கள்.
காதல், திருமண விஷயங்களில் இருந்து சிறு சிறு கருத்து வேறுபாடு, முரண்பாடுகள். பிரிந்திருக்கும் தம்பதிகள் மீண்டும் சேரும் யோகம் உண்டாகும். மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல சீட் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்புவோர் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்த கோர்ஸ், கல்லூரிகள் கிடைக்கும். படித்த முடிந்த மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கும்.
இளைய பருவத்தினர் காதல் விவகாரத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். அரசுத் தேர்வு எழுதுவோருக்கு தேர்ச்சி பெறும் யோகம், அரசு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் சொல்வதை உங்கள் துணை தவறாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது. குழந்தைகளை நினைத்து அதிகம் கவலைப்படுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு 10 இல் தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் வருவதால் தொழிலில் அற்புதமான முன்னேற்றம் கிடைக்கும். நல்ல லாபங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். வெளிநாடு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை மாற்றம் உண்டாகும். வேலை, தொழில் சிறப்பாக இந்த சனி வக்ர பெயர்ச்சியில் அமையும்.
கல்வி அமைப்பில் மிதுன ராசி மாணவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 4 ஆம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் படிப்பில் கவனக் குறைவு ஏற்பட்டிருக்கும். சனி பகவான் இப்போது வக்கிரமாவதால் மாணவர்களுக்கு மந்தத் தனம் குறையும். எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்கிற வைராக்கியம் பிறக்கும். போட்டித் தேர்வுகள், வங்கித் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், ஜூடிசியல் தேர்வுக்கு முயற்சிப்பவர்கள் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
திருமண ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் நிறைய பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் திருமண வாழ்க்கையில் இருந்திருக்கும். அந்த நிலைமைகள் இனி உங்களுக்கு மாறும். யாராவது ஒருவர் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க வழிவகை செய்வார்கள். நீண்ட நாட்களாக திருமணமாகதவர்களுக்கு அம்மா வழி உறவினர்கள் மூலமாக வரன் அமையும் யோகம் உண்டு.
கடகம்
கடக ராசியினருக்கு பாக்கிய சனி வக்கிரமாக மாறுகிறது, அதேசமயம் குரு பார்வை பெறுவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். பொருளாதாரம், குடும்பம், வேலைவாய்ப்பு, தொழில், குழந்தை தொடர்பான விஷயங்களில் நிறைய நன்மைகள் நடக்கும். திருமண வாழ்க்கையில் ஏராளமானோரால் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். துணையிடமிருந்து பரிபூரணமான அன்பு கிடைக்கும்.
உங்களைச் சுற்றியிருந்த பிரச்சனைகள், திருஷ்டிகள் பரிபூரணமாக நீங்கும். திருமணமாகாத கடக ராசியினருக்கு மனதிற்குப் பிடித்தது போன்ற வரன்கள் அமையும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும், செட்டிலாகும் யோகம் உண்டாகும். சிறிது சிறிதாக கொடுத்து வராமல் இருந்த பணங்கள் உங்களை வந்து சேரும். சொத்துகள் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
அப்பா வழி சொத்துகள் மூலமாக லாபம் கிடைக்கும். அப்பாவுடைய ஆலோசனையைப் பெற்று சொத்து வாங்குவோருக்கு அதன் மூலமாக யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகள் மூலமாக லாபம் பெறும் வாய்ப்பு உண்டாகும். அண்ணன், அக்கா என்ற முறையில் வருபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு அஷ்டமசனியானது பெரிய பாதிப்புகளைக் கொடுத்திருக்கும். இப்போது சனி வக்கிரமாவதால் பெரிய ஆறுதல் உங்களுக்கு கிடைக்கும். மனம் தெளிவடையும். குழப்ப நிலைகள் மாறி அமைதியடைவீர்கள். பிரச்சனைகளைக் கண்டு அச்சப்படாமல் என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். தொலைதூர பயணங்கள் மூலமாக லாபம் கிடைக்கும்.
வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அதற்கான தடைகள், தடல்கள் நீங்கும். கையில் காசு இருந்தும் சொத்து வாங்க முடியாதவர்கள் புதிய வீடு, நிலம், இடம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சனி வக்கிரப் பெயர்ச்சியைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. குரு பார்வை பெற்றுள்ள சனி என்பதால் நல்ல மாற்றங்களையும், ஆறுதலையும் கொடுக்கும் அமைப்பு உள்ளது.
தொலைதூரத்தில் சென்று கல்வி கற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அந்த ஆசைகள் நிறைவேறும். சிங்கப்பூர், மலேசியா சென்று படிப்பது, அங்கேயே வேலை கிடைப்பது, செட்டிலாவது போன்ற பாக்கியம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு. நிறைய பேர் சிஏ கிளியர் செய்யும் யோகம் உண்டாகும். நீண்ட காலப் பிரச்சனைகளை எல்லாம் அடுத்தடுத்து முடியும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு கண்டகச் சனி நடந்து கொண்டிருந்தது. இப்போது சனி வக்கிரமாக பெயர்ச்சியாவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். சனி நல்லவராக இருந்தாலும் 7 ஆம் இடத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் எல்லா விஷயங்களிலும் தடை, தாமதம் உண்டாகியிருக்கும். எல்லா விஷயங்களையும் அசல்டாக செய்வது, கவனக் குறைவுடன் செயல்படுவது, மறதி அதிகரிப்பது போன்றவை உண்டாகியிருக்கும்.
ஆரோக்கியமாக இருந்தவர்கள் கூட உடற்பயிற்சியைத் தவிர்ப்பது, தவறான உணவுப் பழக்கங்களை பழகுவது, நண்பர்கள், பார்ட்னர்களுடன் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இந்த இதுபோன்ற எல்லா விஷயங்களும் இனி பரிபூரணமாக மாறும். தள்ளிப்போட்ட விஷயங்களை எல்லாம் இனி அடுத்தடுத்து நடத்தி முடிப்பீர்கள். ஒருமுறைக்கு இருமுறை செக் செய்துவிட்டு வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
பிசினஸ் பார்ட்னர்களிடம் கவனமாக இருப்பீர்கள். புதிய பிசினஸ் பார்ட்னர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். 4 ஆம் இடம் வலுவாக இருப்பதால் படிப்பில் டாப் கிளாஸாக இருப்பீர்கள். நன்றாக படிப்பது, நல்ல மதிப்பெண்கள் பெறுவது போன்றவை ஏற்படும். போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் யோகம் உண்டு. மத்திய அரசு வேலைகள், சீருடைப் பணியாளர்கள் ஆகும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
