Sani Vakra Peyarchi: குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் துலாம் ராசி.. கடன் எல்லாம் தீரப்போகுது
Sani Vakra Peyarchi Palan: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், துலாம் ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசியினருக்கு கடந்த ஓராண்டாக நிறைய பேரை பகைத்திருப்பீர்கள். கடனும் அதிகமாகி இருந்திருக்கும். வழக்குகளில் சாதகமின்மை, பாதுகாப்பற்ற தன்மை, உறவுகளில் நம்பிக்கை இல்லாமை போன்றவை இருந்திருக்கும். இந்த சனி வக்ரப் பெயர்ச்சிக்கும் பிறகு இந்த அமைப்பு கண்டிப்பாக மாறும். யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என்பதை இனிவரும் காலகட்டத்தில் கண்டறிவீர்கள். கடன் வாங்குவது குறையும்.
கடன் தீரும்
இருந்து வந்த கடன்களை அடைக்க ஆரம்பிப்பீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். கல்வியில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவது, அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் அதனை முடிக்கும் அமைப்பு உண்டாகும். போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
குரு பார்வை
6 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதாலும், சனி அங்கு அமர்ந்திருப்பதாலும் சிறிய சிறிய பிரச்சனைகள், தடைகள் படிப்பில் வரும். படிப்போடு சேர்த்து ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். திருமண வாழ்க்கை இனி நன்றாக இருக்கும். 7 ஆம் அதிபதி செவ்வாய் நன்றாக இருக்கிறார். குரு வலுவாக இருக்கிறார். 3 ஆம் அதிபதியும் குருவாக இருப்பதால் இப்போது நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
சொத்து வாங்கும் யோகம்
கணவன், மனைவிக்குள் புரிதல், ஒற்றுமை ஏற்படும், திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகக்கூடிய யோகம் உண்டாகும். கடனை அடைத்து முடிக்க ஆரம்பிப்பீர்கள். சொத்துகளை விற்று கூட கடனை அடைப்பீர்கள். கடன் வாங்கி சொத்து வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். 2, 3 இம்எம்ஐக்களை சேர்த்து கட்டுவீர்கள். கடன்களை சிலர் முழுமையாக அடைக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
முன்னேற்றம்
நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் அமைப்புகளில் இருந்து வெளிவருவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நல்ல சம்பளத்துடன் கூடிய புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு. இரண்டாவது வருமானம் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம்
5 ஆம் அதிபதிக்கு குருவின் பார்வை இருப்பதால் பெண் குழந்தை கிடைக்கும் பாக்கியம் உண்டாகும். பிரசவம் நன்றாக இருக்கும். தாயும், சேயும் மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள். அதிஷ்டம் நிறைந்த குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புள்ளது. எதிரிகள் உங்களுடனேயே இருப்பார்கள் என்பதால் மிகுந்த கவனம் தேவை. கூட இருந்தே குழி பறிக்கும் நபர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள்.


Click it and Unblock the Notifications
