Sani Vakra Peyarchi: விருச்சிக ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. உங்க காட்டுல இனி பண மழை தான்

Subscribe to Oneindia Tamil

Sani Vakra Peyarchi Palan: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், விருச்சிக ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

sani-vakra-peyarchi-what-kind-of-good-benefits-will-get-viruchigam-rasi-people-in-this-period

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். வீடு, திருமணம், வேலை என எல்லா விஷயத்திலும் பிரச்சனைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள். இப்போது சனி பகவான் 5 ஆம் இடத்திற்குச் சென்றுவிட்டதால் உங்களுக்கு இனி சனியின் பாதிப்பு இருக்காது. இப்போது சனி பகவான் வக்கிரமாவதால், குரு பகவான் உச்சமாக இருப்பதால் யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

பிள்ளைகளால் யோகம்

உங்களுடைய பிள்ளைகள் பெரிதாக சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருந்தாலும், அதில் அனுப்பி வைத்தால் பெரிய வெற்றிகளைப் பெறும் யோகம் உண்டாகும். குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். சமூகத்தில் நல்ல மதிப்பு, மரியாதை கிடைக்கும். வீடு கட்டுவது, வீடு வாங்குவது, உறவினர்கள் உங்களைப் பார்த்து பெருமைப்படுவது போன்ற யோகம் உண்டாகும். கல்வியில் நல்ல மேன்மை ஏற்படும்.

கல்வியில் மேன்மை ஏற்படும். படிக்காத பிள்ளைகள் கூட இனி படிக்க ஆரம்பிப்பீர்கள். படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சுய அறிவைப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய சாமார்த்தியத்தால் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஞானத்தினால் பெரிய பெயர் புகழ் கிடைக்கும். காதல் மலரக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். காதலைத் தேர்ந்தெடுப்பவர்கள் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இல்லையெனில் சிக்கலில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். சொத்துகளை விற்க வேண்டும் என்று நினைப்போருக்கு விற்பதற்கான யோகம் உண்டாகும். அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல விலைக்கு சொத்துகளை விற்று லாபம் சம்பாதிப்பீர்கள். அதன் மூலம் கடனை அடைக்கும் யோகம் உண்டாகும். அப்பாவின் கடன்களையும் அடைப்பீர்கள். உங்கள் பிள்ளைகளின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும்.

கையில் நல்ல பணப் புழக்கம் ஏற்படும். விலை மதிப்பான பொருள்களின் மீது நாட்டம் அதிகரிக்கும். தனக்காக நிறைய செலவு செய்வார்கள். வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான செலவுகளைச் செய்வீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான யோகம் உண்டாகும். நிம்மதி, சந்தோஷம் அதிகரிக்கும். வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். சிலர் குழந்தைகளைத் தத்தெடுக்கும் யோகம் உண்டாகும்.

கவனம்

அப்பாவின் உடல்நிலையில் கவனம் தேவை. காவல் துறை, நீதிமன்றம் போன்ற துறையினரிடமும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத அலைச்சல்களை சந்திப்பீர்கள். மற்றவர்களுக்காக கையெழுத்து போடுவது, லோன் வாங்கித் தருவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. செவ்வாழை பழம், துவரம் பருப்பு போன்றவற்றை தானமாக கொடுப்பது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+