சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம்.. தொழிலில் வெற்றி.. சதுர்கிரக யோகத்தால் தனுசுக்கு ஜாக்பாட்
சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்கள் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீனம் ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின்சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது தனுசு ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
மீனம் ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீட்சமாக உள்ளார். இது நீட்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை சதுர் கிரக யோகம் என்பார்கள்.
தனுசு ராசிக்கு உங்களுடைய 4 ஆம் இடமான மீன ராசியில் 4 கிரகங்களின் கூட்டுச் சேர்க்கை நடைபெறுகிறது. குரு பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள். எந்தவொரு விஷயமானாலும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். வைராக்கிய குணம் கொண்டவர்கள். ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் அதில் மிகவும் சரியாக இருப்பவர்கள். அடுத்தவர்களின் வார்த்தைக்கு மரியாதை தருபவர்களாக இருப்பார்கள். தனக்கு சரியென்று பட்ட விஷயத்தை மட்டுமே செய்வார்கள். மற்றவர்கள் சொல்வதை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். கட்டுப்பாடு, கண்ணியத்துடன் இருப்பவர்கள்.
தேவையில்லாத பிரச்சனைகளை அதிக அளவில் சந்திப்பார்கள். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக உள்ளது என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். மனதுக்குள் நிறைய புலம்பிக் கொண்டிருந்திருப்பீர்கள். திருமண வாழ்க்கையிலும் திருப்தி இல்லாமல் இருப்பீர்கள். நீங்களே பரிந்துபோயும், இறங்கி போய்க் கொண்டிருக்கும் சூழல் இருக்கும். அனைத்து சூழ்நிலைகளும் போராட்டமாகத்தான் இருக்கும். அனைத்து முயற்சிகளும் தடையாக இருந்திருக்கும்.
இந்த அனைத்துவிதமான பிரச்சனைகளும் சரியாகப் போகிறது. நான்காம் இடம் எனும் சுகஸ்தானம் வண்டி, வாகனம், வீடு, கல்வி ஆகியவற்றை கொடுக்க கூடியது. இந்த 4 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் உச்சமடைந்துள்ளார். இந்த காலகட்டத்தில் 4 கிரகங்களின் கூட்டுச் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தொழில் ரீதியான முயற்சிகள் நல்ல பலனைத் தரும். புதிய தொழிலை தொடங்கி நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நிவர்த்தி ஆகும். லாபத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்க கூடிய காலமாக இருக்கும்.
மனசோர்வில் இருந்தவர்களுக்கெல்லாம் இந்த காலம் சாதகமான காலகட்டமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு சென்று வருவதற்கான யோகம் உண்டு. புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் மாற்றம், உயர் பதவி பெறுவதற்கான யோகங்கள் உண்டு. உங்களுடைய கடின உழைப்புக்கான அங்கீகாரத்தையும், பலனையும் பெறுவீர்கள்.
திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையும். திருமணம் சம்பந்தப்பட்ட அனுகூலன்கள் சிறப்பாக இருக்கும். பிடிக்காத வாழ்க்கையில் இருந்து வெளியில் வந்து நீங்கள் எதிர்பார்த்த வாழ்க்கையை அமைப்பீர்கள். குழந்தை பாக்கியம் பெறுவதற்கான யோகம் உண்டு. காதலிப்பவர்கள் திருமணம் செய்வதற்கான யோகங்கள் உண்டு. கணவன் மனைவி, காதலிப்பவர்களுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சிகிச்சை பெற்று வருபவர்கள் நிச்சயமாக குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்.
வண்டி, வாகன மாற்றம் யோகம், வீடு மாற்றும் யோகம், ஆடம்பரப் பொருள்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள், நகை சேர்ப்பதற்கான காலமாக இருக்கும். குழந்தைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் கல்விக்குத் தகுந்தாற்போல சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கல்வி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையான உணவுப் பழக்க வழக்கங்களை கட்டுப்படுத்துவது நல்லது.
தூக்கமின்மையில் இருந்து வந்தவர்களுக்கு இனிமேல் நல்ல தூக்கம், நிம்மதியான வாழ்க்கையாக இருக்கும். புதிய வண்டி வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டு. கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகும். நிர்வாகத் திறமை, புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள். கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எல்லா விதமான யோகத்தையும் இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications