கண்ணா ரெண்டு லட்டு சாப்பிட ஆசையா.. 4 கிரகங்களின் சேர்க்கையால் மேஷம் ராசிக்கு அடிச்ச ஜாக்பாட்
சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்கள் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீனம் ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது மேஷம் ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீச்சமாக உள்ளார். இது நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
மேஷ ராசிக்கு 12வது இடத்தில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் கூட்டு சேர்க்கை நடைபெறவுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உங்கள் ராசியில் ராகு, குரு இருந்ததால் காரியங்களில் தடைகள் சூழ்ந்திருக்கும். ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டிருப்பீர்கள். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்திருப்பீர்கள்.
உத்யோகம், தொழிலிலும் அதிகளவு பிரச்னைகள் வந்திருக்கும். எண்ணங்களில் தொய்வு இருந்திருக்கும். கடன் கழுத்தை நெரித்திருக்கும். கணவன் - மனைவி மற்றும் காதல் உறவிலும் சங்கடங்களை அனுபவித்திருப்பீர்கள். இதனால் மனம் மிகவும் தளர்ந்திருக்கும். தற்போது அது மொத்தமாக மாறவுள்ளது. இந்த நான்கு கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு அபரிமிதமான பலன்களை தரப்போகிறது.
வீண் விரயங்கள் குறையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். இதுவரை நீங்கள் செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு, வெளிமாநில பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக காரியங்களால் மனம் நிம்மதியடையும். தொழிலில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
திருமணத்துக்காக நீண்ட காலம் முயற்சி செய்து சோர்வடைந்தவர்களுக்கு இந்த காலத்தில் திருமண யோகம் கைக்கூடும். திருமணத்தில் இதுநாள் வரை இருந்த தடைகள் நீங்கும். காதல் உறவு வெற்றிகரமாக திருமணத்தில் முடியும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரித்து மகிழ்ச்சி பொங்கும். நிலம், வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த காலமாகும்.
நீண்ட காலமாக திட்டமிட்ட வீட்டு புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் இந்த காலகட்டம் சரியானதாக இருக்கும். புதிய வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. இப்படி சுப செலவுகள் அதிகரிக்கும். நீண்ட கால ஆசைகள் படிப்படியாக நிறைவேறும்.
குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். அதேநேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ராகு பகவான் 12 ஆம் இடத்தில் இருப்பதால் வீண் மருத்துவ செலவுகள் உண்டாகும்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications