4 கிரகங்களின் சேர்க்கை.. ரிஷபம் ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டும் அற்புத யோகம்
சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்கள் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீனம் ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின்சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது ரிஷபம் ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
மீனம் ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீட்சமாக உள்ளார். இது நீட்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை சதுர் கிரக யோகம் என்பார்கள்.
ரிஷபம் ராசிக்கு 11 ஆம் இடத்தில் இந்த நான்கு கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது. பல்வேறு காரணங்களால் அண்மை காலமாக வாழ்க்கையில் ஏராளமான பிரச்னைகள் சந்தித்திருப்பீர்கள். செல்வாக்காக வாழ்ந்த நீங்கள் கடன் அதிகரித்து மதிப்பு, மரியாதை குறைந்திருக்கும். சொத்துகளிலும் இழப்புகள் ஏற்பட்டிருக்கும். குடும்பத்திலும் சோகம் சூழ்ந்திருக்கும்.
தற்போது 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் இந்த நான்கு கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது. உங்கள் ராசி நாதனான சுக்கிரன் இங்கு உச்ச பலத்தில் உள்ளார். இது உங்களுக்கு சிறப்பான பலன்களை தரவுள்ளது. கடன் சுமை குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். முதலீட்டிலும் லாபம் அதிகரிக்கும். இதன் காரணமாக தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு திருப்தியாக இருக்கும்.
தொழிலில் விரிவாக்கம், உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உங்கள் திறமை நன்கு வெளிப்பட்டு அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி, திருமண யோகம் கைக்கூடும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த மனகசப்புகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும்.
காதல் உறவு வெற்றிகரமாக திருமணத்தில் நிறைவேறும். எதிர்பாராத நேரத்தில் திடீரென உதவிகள் கிடைக்கும். நிலம், வீடு வாங்குவதற்கான அமைப்புகள் உள்ளன. சொந்த வீடு கனவு நனவாவதுடன், புதிய வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. நீங்கள் முயற்சி செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றியில் முடியும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
இந்த காலத்தில் அத்தியாவசிய பொருட்கள், நகை உள்ளிட்ட ஆபரணங்கள் சேரும். உங்கள் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்துவதற்கு இது சரியான காலம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மருத்துவ செலவுகள் குறையும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான மனகசப்புகள் நீங்கும். குழந்தைகளின் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications