தொழிலில் புதிய உச்சம்.. 4 கிரகங்களின் சேர்க்கை சிம்மம் ராசிக்கு "ஜாக்பாட்"

Subscribe to Oneindia Tamil

சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்களின் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீன ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது சிம்ம ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

Simmam 4 planets 4

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீச்சமாக உள்ளார். இது நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை சதுர் கிரக யோகம் என்பார்கள்.

சிம்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் கூட்டு சேர்க்கை நடைபெறவுள்ளது. நிர்வாக திறன், தலைமை பண்புக்கு பெயர் பெற்றவர் நீங்கள். மிகவும் நேர்மறையான சிந்தனை கொண்ட நீங்கள், கடந்த சில வருடங்களாக எதிர்மறையான பிரச்னைகளை சந்தித்திருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நிறைய இழந்திருப்பீர்கள்.

உங்களை பெருமையாக பேசியவர்கள் கூட ஏளனமாக பேசும் நிலை வந்திருக்கும். இந்த நான்கு கிரகங்களின் கூட்டு சேர்க்கை உங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரவுள்ளது. உங்கள் ராசி அதிபதியான சூரியன் எட்டாம் இடத்துக்கு வரவுள்ளார். தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி, அடுத்த கட்டத்துக்கு செல்வீர்கள். தொழிலில் நீண்ட காலமாக காத்திருப்பில் இருந்த ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

உங்களை ஏளனமான பேசியவர்களே அழைத்து வேலை கொடுப்பார்கள். இந்த காலத்தில் ஏராளமான புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் புதிய உச்சம் தொடுவீர்கள். பணியிடத்தில் உங்களின் திறமை முழுவதுமாக வெளிப்படும். இதுநாள் வரை ஏங்கிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட அங்கீகாரம் கிடைக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலத்தில் திருமணம் ஆவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கணவன் - மனைவி இடையே இருந்த மனகசப்புகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். முக்கியமாக வாழ்க்கை துணையின் முழு ஆதரவால் நல்ல ஆதாயம் உண்டு. பிரிந்த கணவன் - மனைவி இணைவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்போது குழந்தை பேறு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

உங்கள் நீண்ட நாள் கனவான நிலம், வீடு போன்ற அமைப்புகள் உருவாவதற்கு வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பார்த்தபடி வண்டி, வாகனம் வாங்குவதற்கான சூழ்நிலையும் உள்ளது. வீடு தொடர்பாக நீங்கள் திட்டமிட்ட புனரமைப்புப் பணிகளும் நிறைவேறும். பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்குவீர்கள்.

உங்களது மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பயம், மனக்கவலைகள் நீங்கி தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். கல்வியிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு, வெளிமாநில பயணங்களால் யோகம் உண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+