சனி வக்ர பெயர்ச்சி 2022 : சனி பகவானின் பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு சங்கடம் காத்திருக்கு
சனிபகவான் வக்ர கதியில் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு பாதகங்கள் ஏற்படலாம். மேஷம் முதல் மீனம் வரை 142 நாட்களில் என்ன பலன் கிடைக்கும் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
சென்னை: சனி வக்ரம் அடைதல் என்பது அவர் பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும். சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை சனிபகவான் வக்கிரமாக செல்வதனால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம்.
சனிதான் ஆயுள் காரகன். சனிதான் தொழில் காரகன். சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி. ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும். ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி. இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்குகிறார்.
சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெறுகிறார் சூரியனுக்கு 5ல் சனி வரும் போது வக்ர நிவர்த்தியடையும். கும்ப ராசிக்கு அதிசாரமாக சென்ற சனிபகவான் மீண்டும் பின்னோக்கி நகர்கிறார். ஜூன் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரைக்கும் சுமார் 141 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கப்போகிறார் சனிபகவான். சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். பகை விலகி நிம்மதி உண்டாகும். கடுமையான நெருக்கடியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் காலமாக இந்த மாதங்கள் அமையும்.
சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். இனி சனிபகவான் பின்னோக்கி செல்வதால் பார்க்கும் வேலையில் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும். அவசரப்பட்டு வேலையை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு முயற்சிப்பதோ கூடாது. கவனமாகச் சிந்தித்து செயல்படுதல் வேண்டும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டுப் பின் இனிதே நடந்தேறும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். தடைபட்ட பல வேலைகள் நடைபெறும். அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள். நோய்கள் குணமடையும், வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.

ரிஷபம்
சனிபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தற்போது சஞ்சரிக்கிறார். இது தொழில் ஸ்தானமாகும். இது கரும ஸ்தானம். வேலையில் நெருக்கடி நிலை ஏற்படும். தொழிலில் நெருக்கடிகள் ஏற்படும். காலி மனை, விடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். நல்ல கல்வி உயர்கல்வி அமைய வாய்ப்புகள் அமையும். மேலும் தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை நிலவும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடல் ஆரோக்கியம் சற்று சுமாராகவே இருந்து வரும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். நேரத்திற்கு உணவு அருந்துதல் நலம் கூடியவரை விரதத்தைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்
பாக்கிய சனியால் எந்த தடையும் இன்றி செயல்கள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. சனிபகவான் வக்கிரகால கால கட்டத்தில் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வந்து சேரும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. முதலாளி தொழிலாளி உறவு சுமுகமாக இருக்காது. தேவையற்ற வகையில் நம்மை பற்றிய வீண் வந்தந்திகள் உலவும். அரசாங்கத்தால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வேலை கிடைப்பதில் தடைகள் ஏற்படும். வேலை கிடைத்தாலும் அலைச்சல்களும் நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல்கள் சுமூகமாக இருக்காது. மேலும் தகப்பனாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சிலருக்கு கடன்கள் பெருகி வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை அதிகரிக்கும். சனி பகவானை எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

கடகம்
கடக ராசிக்காரர்களே உங்களை அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கிறார். சனி வக்ரம் அடைவதால் தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும் கணவன் - மனைவி இடையே பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். எடுக்கும் முயற்சிகளில் ஆரம்பத்தில் தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடக்கும். காதல் விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு பின் விருப்பம் பூர்த்தியாகும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசிக்க வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். கடன் பிரச்னை தீரும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே..சனிபகவான் கண்டச்சனியாக அமர்ந்து கவலைக்கு ஆளாக்கி வருகிறார். சனிபகவான் பின்னோக்கி நகர்வதால் சில நன்மைகள் ஏற்படும். உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். தாயாரின் உடல் நிலை சீராகும். ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். சிலர் வேலை விஷயமாக குழந்தைகளை விட்டு பிரிய நேரிடும் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிவார்கள். பொறுப்பும் குடும்ப பாரமும். தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும். சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. அடிவயிற்றில் பிரச்சனை, நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்படாமல் சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும். இந்த கால கட்டத்தில் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ளுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தற்போது ஆறாம் வீட்டில் உள்ள சனியால் அபரிமிதான யோகங்களை பெற்று வரும் நீங்கள் கவலையற்று இருக்கிறீர்கள். சனியின் வக்ர சஞ்சாரத்தினால் அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் தேவையற்ற மன உளைச்சல்கள் அதிகரிக்கும் சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். நெருங்கிய உறுப்பினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். இருக்கும் பொருட்கள் கையை விட்டுப் போகும் நாணயம் தவறி நடக்கும் சூழ்நிலை அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டமாகவும் அமையும். திருப்தியான மனநிலை இருந்து வரும். அதே சமயம் பணவரவு சீராக இருந்து வரும். தந்தையாரால் எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு கிடைக்கும். இந்த காலத்தில் உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் ஏற்படும், இழுபறியான வேலைகள் உடனடியாக முடியும். வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு தாய் மாமன்களின் அன்பும் அவர்களால் சகாயமும் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் வாங்கி வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். வேலை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கையில் தாரளமாக பணப்புழக்கம் இருந்து வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். உறவினர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். சங்கடங்கள் நீங்க சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

விருச்சிகம்
சனி தற்போது அர்த்தாஷ்டம சனியாக இருந்து வக்ர கதியில் செல்கிறார். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். குழந்தைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். பாதிப்புகள் குறைய ஆஞ்சனேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

தனசு
ஏழரை சனி ஆட்டிப்படைத்தது. தற்போது சனி பகவான் அதிசாரமாக மூன்றாவது வீட்டில் இருக்கிறார். சனிபகவான் வக்ர சஞ்சாரத்தினால் சிலருக்கு உயர்கல்வி பயிலவும் வெளிநாடு செல்லும் யோகமும் ஒரு சிலருக்கு அமையும். விரயச் செலவுகள் அடிக்கடி வந்து போகும். வீடு மற்றும் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு வந்து சேரும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற கடன் வாங்குதல் கூடாது. உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். புது முயற்சிகளில் அதிக கவனமுடன் இருக்கவும். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். அதனால் அலைச்சல்களும் அசதியும்தான் அதிகரிக்கும். பாதிப்புகள் குறைய திருநள்ளாறு நள தீர்த்தக்குளத்தில் நீராடி சனிபகவானை வணங்கலாம்.

மகரம்
சனி பகவான் தற்போது இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். பின்னோக்கி செல்லும் போது எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். முன்னோர்கள் சொத்து கணவன் அல்லது மனைவி மூலம் வருமானம் வந்து சேரும். கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். கைக்கு வராத பணம் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபகரமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். எதிர்பார்த்த வேலையாட்கள் வந்து சேர்வர். மனை, வீடு, வண்டி வாகனங்களை முதலில் கொடுத்து விட்டுப் பின் புதிதாக வாங்க சந்தர்ப்பம் அமையும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்க சந்தர்ப்பம் அமையும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திப்பார்கள். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அபிராமி அன்னையை வணங்கி வர பாதிப்புகள் தீரும்.

கும்பம்
சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார். இனி சனிபகவான் பின்னோக்கி செல்வதால் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபம் கிட்டும். முதலாளி என்ற அந்தஸ்தை ஒரு சிலருக்கு கொடுக்கும். வெளிநாடுகளில் இருந்து வரும் செய்திகள் சாதகமாக இருந்து வரும். எப்பொழுதும் சுறு சுறுப்பாகவும் உற்சாகவும் இருப்பீர்கள். அடிக்கடி வெளியூர் மற்றும் வெளி மாநிலம் செல்வதற்கு ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உயர்கல்வி பயில வாய்ப்பும் வேலை நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறும் காலமாகும். விலையுயர்ந்த பொருட்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சனிக்கிழமை பெருமாள் கோவில்களுக்கு சென்று ஆஞ்சநேயரை வணங்கி வர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

மீனம்
சனி உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். இனி பின்னோக்கிச் செல்வதால் இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் தாமகவே அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். முக்கிய விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications