சனிப்பெயர்ச்சி, சூரியகிரகணம்: பணத்தை அள்ளப் போகும் ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
சனிப்பெயர்ச்சி: மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் தனது ராசியான கும்பத்தில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்ய இந்த நாளில் சூரிய கிரகணமும் நடைபெறவுள்ளதால் இவை இரண்டும் இணைந்து சில ராசியினருக்குமான அதிர்ஷ்டமான பலன்களைத் தரப் போகின்றனர். எந்த ராசியினர் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். பண வரவு பெறப்போகும் ராசிகள் எவை என்று இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த மாற்றமானது அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நகர்வால் ஒரு சில ராசியினர் சுப பலன்களையும், சில ராசியினர் கெடுபலன்களையும் சந்திக்க நேரிடும்.

நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் மிகவும் செல்வாக்கு மிக்க கிரகங்களில் ஒன்றாகும். நாம் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கக் கூடியவர் சனி பகவான். சனிப்பெயர்ச்சி என்பது ஜோதிட சாஸ்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வேத நாட்காட்டியின் படி மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
இந்த சனிப்பெயர்ச்சியின்போது சூரிய கிரகணமும் நடைபெறவுள்ளது. சனி பகவான் மீன ராசியில் இடப்பெயர்ச்சியாவது மற்றும் சூரிய கிரகணம் ராசி மாற்றமும் சூரிய கிரகணமும் இணைந்து பல ராசிகளுக்கு அதிர்ஷ்டமான பலன்களைத் தரப் போகிறது. அந்த வகையில், யோகம் பெறும் ராசியினர் யார் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்: சூரிய கிரகணமும், சனிப்பெயர்ச்சியும் இணைவது மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். நிதி சார்ந்த நன்மைகளைப் பெறுவீர்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். தொழிலதிபர்கள் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் காணும் நேரமாக இருக்கும். திடீர் பண வரவுகள் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு நீண்டநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உங்களுடைய வேலைகள் மூலமாக பணியிடத்தில் பாராட்டைப் பெறுவீர்கள்.
தனுசு: சனிப்பெயர்ச்சி, சூரியகிரகணம் ஒரே நாளில் நடக்கும் இந்த நிகழ்வுகளால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். செய்து முடிக்க முடியாமல் நிலுவையில் இருக்கும் பணிகளை செய்து முடிப்பதற்கான சூழல் உருவாகும். தொழில் செய்பவர்கள் தங்களுடைய விரிவுபடுத்துவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். குடும்பத்துடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். உங்களுக்கு வரும் பிரச்சனைகளை எளிதாக சமாளித்து செல்வீர்கள்.
மகரம்: ஒரே நாளில் நடக்கும் சனிப்பெயர்ச்சி, சூரிய கிரகணம் உங்களுக்கு மங்களகாரமான காலகட்டமாக இருக்கும். மகர ராசிக்காரர்களுக்கு சொத்துகள் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். பழைய முதலீடுகள் மூலமாக நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். நிதி சார்ந்த பிரச்சனைகள் தீரும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications