வந்தாச்சு வசந்த பஞ்சமி.. சனியின் மாற்றத்தால் அதிர்ஷ்டம் , ஆடம்பரம்.. 3 ராசிகளுக்கு அடிச்சது ராஜயோகம்
Vasantha panjami: மங்களகரமான நாளாக கருதப்படும் வசந்த பஞ்சமிக்கு முன்பு நடைபெறும் சனியின் நட்சத்திர மாற்றத்தால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டங்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை கிடைக்கப் போகின்றன. நற்பலன்களை அனுபவிக்கப் போகும் அந்த ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கல்விக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதியை வணங்கும் நாளே வசந்த பஞ்சமி. சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்கான மிக சிறப்பான நாளாக வசந்த பஞ்சமி நாள் கருதப்படுகிறது. கல்வி, எழுத்து, படிப்பு சார்ந்த துறைகள், கலைஞர்கள் அவசியம் கொண்டாடப்பட வேண்டிய திருநாளாகும். வசந்த பஞ்சமி என்பது கல்வி, ஞானம், கலைகளின் கடவுளான சரஸ்வதி தேவியின் அவதார தினம் என்பதால் இதனை சரஸ்வதி ஜெயந்தி, சரஸ்வதி பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வணங்குவதால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. பகல் 12.30 மணி துவங்கி அடுத்த நாள் காலை 10.12 மணி வரை பஞ்சமி திதி உள்ளது. வாழ்க்கையில் முன்னேற்றம், வளர்ச்சி, பொருளாதாரத்தில் நல்ல நிலை போன்றவற்றிற்கு காரணமாக திகழும் சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் பஞ்சமி திதியும் இணைந்து வருவது மிகவும் சிறப்பானதாகும்.
வசந்த பஞ்சமி அன்று காலை 09.14 முதல் பகல் 12.33 மணி வரையிலான நேரத்தில் சரஸ்வதி பூஜை செய்வது உகந்ததாகும். இந்த நன்னாளின் முன் தினம் சனி பகவான் தனது இயக்கத்தை மாற்றுவதால் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உருவாகப் போகிறது. நீதிக்கு அரசராக விளங்கும் வலிமைமிக்க கிரகமாக சனி பகவான் நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கக்கூடியவர்.
சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் அனுபவிக்கப் போகும் 3 ராசிக்காரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
கன்னி - பூராட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் இடத்தில் சனி தனது போக்கை மாற்றுகிறார். இதனால், கன்னி ராசிக்காரர்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியையும் மரியாதையையும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள்.
உங்களுடைய கடின உழைப்புக்கேற்ற பலனை அனுபவிப்பீர்கள். மூத்த அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அதன் மூலம் அவர்களுடைய ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உங்களுடைய இலக்கை நோக்கி பயணித்து அதில் வெற்றியையும் காண்பீர்கள். காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த பூரட்டாதி நட்சத்திர மாற்றத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றன. நீண்ட நாட்களாக செய்து முடிக்காமல் இருந்து வந்த அனைத்து பணிகளையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். செல்வத்திற்கும் செழிப்பிற்கும் பஞ்சம் இருக்காது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பணிக்கான பாராட்டைப் பெறுவீர்கள்.
உயர் அதிகாரிகள் உங்களிடம் சில பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும் சூழல் உருவாகும். மன அழுத்தம், மன குழப்பத்தில் இருந்து விடுதலை அடைவீர்கள். திடீர் பண வரவுகள் இருக்கும். குடும்பத்துடன் இனிமையான நேரங்களை செலவிடுவீர்கள்.
மீனம் - பூராட்டாதி நட்சத்திரத்தில் தனது பயணத்தை மாற்றும் சனி பகவானால் மீன ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. இந்த ராசியினருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண வரவுகள் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பீர்கள்.
புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபத்தைக் காண்பீர்கள். சேமிப்பு, முதலீடுகளால் வெற்றி அடைவீர்கள். உங்களைச் சுற்றியிருந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் வெளியில் வரும் சூழல் ஏற்படும்.












Click it and Unblock the Notifications